சென்னை மாவட்ட தடகளம் அரசுப்பள்ளிகள் அசத்தல்
2019-12-08@ 00:23:49

சென்னை: சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள அரசுப் பள்ளி, மாநகராட்சிப் பள்ளி மற்றும் ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள், நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. 400 மாணவிகள் உட்பட 800க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் யு-17 பிரிவில் வெங்கடேஷ், ஜீவா, சபா முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனர். அதுபோல், 1,500 மீட்டர் பெண்களுக்கான யு-17 ஓட்டப்பந்தயத்தில் அபிதா, கிரேசி, தேன்மொழி முதல் 3 இடங்களை வசப்படுத்தினர்.யு-19 மாணவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஷாம் குமார் தங்கப்பதக்கம் வென்றார். மகேந்திரன் வெள்ளி, உக்கிரபாண்டி வெண்கலம் வென்றனர். யு-19 மாணவி
களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தர்ஷா முதலிடத்தையும், பூமிகா 2வது இடத்தையும், ரமணி 3வது இடத்தையும் பிடித்தனர்.
மாணவர்களுக்கான குண்டு எறிதல் யு-17 பிரிவில் அண்ணாமலை, ஜீவா, மகேஷ் முதல் 3 இடங்கள் பிடித்தனர். யு-17 மகளிர் குண்டு எறிதல் போட்டியில் பரமேஸ்வரி, விமலா, சுகன்யா ஆகியோர் முதல் 3 இடங்களை வென்றனர். வெற்றி பெற்றவர்
களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருவளர்செல்வன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் : தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன் குவிப்பு: பந்துவீச்சில் நடராஜன் அசத்தல்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 விக்கெட்டை வீழ்த்தினார் தமிழகத்தை சேர்ந்த நடராஜன்: முதல் இந்தியர் எனும் சாதனை படைத்த நெட் பவுலர்
சில்லி பாய்ண்ட்...
தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்: 2வது சுற்றில் கிடாம்பி
79 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அசத்தல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்