குடித்த மதுவுக்கான கட்டணத்தை செலுத்தக்கோரி துப்பாக்கி முனையில் தொழிலதிபர் மிரட்டல்: பட விநியோகஸ்தர்கள் அதிரடி கைது
2019-12-06@ 03:33:15

சென்னை: துப்பாக்கி முனையில் தொழில் அதிபரை மிரட்டிய பட விநியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டனர். தி.நகர் கோபால கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹேமநாத்(30), இன்டிரீயர் டெக்கரேட்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி அண்ணா மேம்பாலாம் அருகே உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில தனது நணபர்களுக்குடன் மது அருந்த சென்றுள்ளார். அப்போரு அவருக்கு எதிராக 5 பேர் அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் எதிரே அமர்ந்து இருந்த திரைப்பட விநியோகஸ்தரான நெசப்பாகம் பிரவீன், அவரது நண்பர் திருவான்மியூரைச் சேர்ந்த சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் தாங்கள் குடித்த மதுவுக்கு ஹேமநாத்தை ‘பில்’ கட்டும்படி மிரட்டியுள்ளனர். அதற்கு ஹேமநாத், ‘நீங்கள் குடித்ததற்கு நான் ஏன் பணம் கட்ட வேண்டும்’ என்று கேட்டதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
பினனர் பிரவீன் மற்றும் சீனிவாசன் இருவரும் ஹேமநாத்தை தரதரவென்று கார் ஷெட்டுக்கு இழுத்து சென்று துப்பாக்கிகளை எடுத்து நெத்தியில் வைத்து மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்தவர் அவர்களிடமிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து ேஹமநாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த தகவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆன்நத் சின்கா கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து கடந்த 2ம் தேதி தேனாம்போட்டை ஆய்வாளர் விஜயகுமார் சம்பவம் நடந்த நட்சத்திர ஓட்டலில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தார். இதையடுத்து சினிமா விநியோகஸ்தர்கள் இருவர் மீதும் ஐபிஎசி 147, 148, 341, 294 (பி), 385, 506/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி, கார் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
நாமக்கல் அருகே பரபரப்பு: கஞ்சா போதையில் 7 பேரை கடித்துக்குதறிய வாலிபர்
போலீசில் சிக்காமல் தப்பிப்பதற்காக மாடியில் இருந்து குதித்த வாலிபரின் கை, கால்கள் முறிந்தது: ஒன்றரை டன் குட்கா, 2 வேன் பறிமுதல்: இருவர் கைது
மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு
முதல் மனைவியின் உறவை துண்டிக்காததால் தகராறு 2வது மனைவியை இரும்பு பைப்பால் அடித்து கொன்ற கணவன் கைது
திருவள்ளூர் அருகே நடுரோட்டில் குடிபோதையில் ஹரியான இளம்பெண் ரகளை
சேமிப்பு கணக்கு தொடங்கிய போது வங்கியில் கள்ள நோட்டுகளை செலுத்திய பெண்ணுக்கு வலை
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!