SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோயில் கோயிலாக சுற்றும் முன்னாள் டிஜிபி புகைப்படம் எடுப்பவர்களிடம் எரிந்து விழுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-12-05@ 04:24:18

‘‘குட்கா முறைகேடு புகாரில் விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டு அமலாக்கத்துறைக்கு முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் கடிதம் அளித்திருந்தாரே.. இப்ப என்ன பண்றார்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடிதத்தில் குறிப்பிட்டபடி தமிழகம் முழுவதும் கோயில் கோயிலாக வலம் வந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து வருகிறார். இதன் ஒருகட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் வந்த அவர் அதிகாலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் சாமித்தோப்பு அய்யா வைகுண்டபதி, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் என்று பிரசித்தி பெற்ற கோயில்களில் எல்லாம் சென்று மனமுருகி வேண்டினார். கோயில்களில் தரிசனம் முடித்து வெளியே வந்தவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றனர். குட்கா பற்றி ஏதாவது கேட்பார்களோ என்று எண்ணிய அவர் பேட்டி வேண்டாம் என்று ஒரு வரியில் கூறிவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.  புகைப்படமும் எடுக்க கூடாது என்று கறாராக கூறிவிட்டார். மீறி எடுக்க முயன்றவர்களிடம் எரிந்து விழுந்தார்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாம்பழ தலைவரை கலாய்த்தார்களாமே ஆஸ்பத்திரி ஊழியர்கள்..அது என்ன விஷயம்..’’ என்று ஆர்வமாய் கேட்டார் பீட்டர் மாமா.

 ‘‘மாங்கனி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு லேண்ட் லைன் போனில் வரும் சிபாரிசுகளுக்கு பஞ்சமே இல்லையாம். இப்படி சிபாரிசு செய்த மாம்பழ கட்சி தலைவரை, யாரென்று தெரியாமல் ஊழியர்கள் கலாய்த்ததுதான் இப்போது ஹாட் டாபிக். தொண்டர் ஒருவரை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி ஆஸ்பத்திரியின் லேண்ட் லைனுக்கு போன் போட்டாராம் மாம்பழ கட்சி தலைவர். இரண்டெழுத்து இன்ஷியலுடன் பெல்லான பெயரை சொல்லி அவர் பேசியபோது போனை எடுத்தவர், நீங்கள் யாரென்றே தெரியாது என்று கூறி, கலாய்த்து மிரளவைத்தாராம். இருந்தாலும் தலைவர் விடவில்லையாம். தொடர்ந்து லேண்ட் ைலனுக்கே போன் போட்டாராம். அடுத்தடுத்து எடுத்த ஊழியர்களும் இதையே கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் ஊழியர்கள், உயரதிகாரியிடம் விஷயத்தை சொன்னாங்களாம். அவர் சுதாரித்துக் கொண்டு, பேசியதில், எதிர் முனையில் இருப்பவர் மாம்பழ கட்சி தலைவர் என்பதை உறுதி செய்து கொண்டாராம். ஒரு ெபரிய கட்சியோட ஸ்டேட் லீடர் பேரைக் கூட தெரியாமலா ஆஸ்பத்திரியின் நிர்வாக பிரிவில் இருப்பார்கள் என்று தலைவர், உயரதிகாரியிடம் சலித்துக் ெகாண்டாராம். அப்புறம் நீங்க சிபாரிசு செய்த தொண்டரை நன்றாக கவனித்துக் கொள்வதாக கூறி, தலைவரை சாந்தப்படுத்தினாராம் உயரதிகாரி’’ என்றார் விக்கியானந்தா.‘‘இப்ப எல்லாம் அமைச்சர்கள் கொஞ்சம் உஷாரா பேசுறாங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மேலிட கண்டிப்புதான் காரணம்... சிவகங்கை மாவட்ட அமைச்சர், தொடர்ந்து ஒவ்வொரு விழாவிலும் சர்ச்சைக்குரிய முறையிலே பேசி வந்தாரு.... தமிழ்நாட்டுல இப்படி ஒரு அமைச்சர் இருப்பதே அதுவரைக்கும் பல பேருக்கு தெரியாமல் இருந்தது... திடீர்னு பரபரப்பாக பேசி தன்னை ‘லைவ்’ ஆக வச்சுக்க ஆசைப்பட்டிருப்பார் போல... கூட்டணியில இருக்கிற தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து இவர் பேசிய பேச்சு கூட்டணியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியதாம்... பின்னர் சமாளித்தாலும், தேமுதிக தரப்புல கொந்தளிச்சுட்டாங்களாம்.... இவரது கருத்துக்கு பதில் தெரிவித்த விஜயகாந்த் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா, ‘இப்படியொரு அமைச்சர் இருப்பதே எனக்கு இப்போது தான் தெரிகிறது’ என அமைச்சரையே பதிலுக்கு கலாய்த்தாராம்... இந்த பேச்சுக்கு பிறகே அதிமுக மேலிடம், அமைச்சரை அழைத்து கடுமையாக கண்டித்ததாம். அதனால் தற்போது அமைச்சர் எங்கும் வாய் திறப்பதே இல்லையாம்... அரசு மற்றும் கட்சி விழா நிகழ்ச்சிகளுக்கு போனாலும், ரொம்பவும் வாயைத் திறக்காமல் இருந்து விட்டு, நிகழ்ச்சி முடிந்ததும் விருட்டென கார் ஏறி கிளம்பி விடுகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘இஸ்ரோ ராக்கெட்டுக்கு சொந்தம் கொண்டாடினாராமே அதிமுக எம்எல்ஏ...’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.

 ‘‘இஸ்ரோவின் ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து கழன்று விழுந்த பூஸ்டர் புதுச்சேரி கடலில் மிதந்தது. வெள்ளை நிறத்தில் ஏதோ ஒரு பொருள் மிதந்ததை கவனித்த மீனவர்கள் ஏதோ லம்பாக கிடைத்துவிட்டதாக கருதி பல மணி நேர போராட்டத்துக்கு பின் கடற்கரைக்கு இழுத்து வந்தனர். இதனால் பைசா பிரோயஜனப்படாது என்பதை அறிந்து மீனவர்கள் விரக்தியடைந்தனர். தகவலறிந்த இஸ்ரோ குழுவினர் புதுச்சேரிக்கு வந்து உதிரி பாகத்தை வாகனத்தில் ஏற்றிச்செல்ல முயன்றனர். அப்போது அப்பகுதி மக்களோடு சேர்ந்து லோக்கல் அதிமுக எம்எல்ஏவும் எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். எவ்வளவோ கஷ்டப்பட்டு கரைக்கு கொண்டுவந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இது இஸ்ரோவுக்கு உரிமையான பொருள், இவை பெரும்பாலும் கடலில் விழுந்தவுடன் மூழ்கிவிடும் தவறுதலாக தண்ணீர் உள்ளே செல்லாததால் மிதந்துள்ளது என தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்பதாக இல்லை. ராக்கெட்டை தர முடியாது, எங்களுக்குதான் என கூறி சூழ்ந்து கொண்டனர். அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் அதில் உள்ள நீளமுள்ள ஒரு பொருளை கழற்றினர். என்னவென்று கேட்டபோது, இது வெடிக்கும் தன்மையுடையது என்று கூறியவுடன், அங்கிருந்து எம்எல்ஏ உள்ளிட்ட அனைவரும் சொல்லிக்கொள்ளாமல் ஓட்டம் பிடித்தனர். சிறிது தூரம் சென்று முதல்வருக்கு போன்போட்டு ராக்கெட்டை மீட்டு கொடுத்ததற்காக மீனவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியாக ₹10 லட்சம் கேட்க, அவரோ, இஸ்‌ரோ இயக்குனரிடம் கேளுங்கள்.. வேண்டுமானால் போன் நம்பர் தருகிறேன் என்றாராம். வேறு வழியின்றி அதிமுக எம்எல்ஏவும் இடத்தை காலி செய்தார். அதறன்பிறகு அங்கு அநாதையாக கிடந்த ராக்கெட் பூஸ்டரை இஸ்ரோ குழுவினர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்