கட்சிக்கு முழுக்கு போடுவதாக வந்த ஊகங்களுக்கு முடிவு: கட்சி தாவல் என் ரத்தத்தில் இல்லை...மாஜி எம்எல்ஏ பங்கஜா முண்டே கருத்து
2019-12-04@ 20:50:24

மும்பை: பாஜ கட்சிக்கு முழுக்கு போடுவதாக வெளியான ஊகங்களுக்கு முடிவுகட்டும் வகையில், கட்சி தாவல் எண்ணம் என் ரத்தத்தில் இல்லை என்று, முன்னாள் எம்எல்ஏ பங்கஜா முண்டே தெரிவித்துள்ளார். பாஜ கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர முதல்வருமான மறைந்த கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜா முண்டே, நேற்று பாஜவின் மூத்த தலைவர்களான வினோத் தவ்தே, ராம் ஷிண்டே மற்றும் எம்எல்ஏ பாபன்ராவ் லோனிகர் ஆகியோரை தெற்கு மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இவர், நடந்து முடிந்த சட்டப்பேரவை ேதர்தலில் தோற்றதால், பாஜ கட்சியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாயின.
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பங்கஜா முண்டே கூறுகையில், ‘‘நான் பாஜவை விட்டு வெளியேறவில்லை. கட்சி தாவல் என்பது என் ரத்தத்தில் இல்லை. என்னுடைய ட்விட்டர் சுயவிவரக் குறிப்புப் பக்கத்தில் பாஜ கட்சியின் கொடி, சின்னத்தை அகற்றுவதன் மூலம் கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எண்ணவில்லை. கட்சியை விட்டு வெளியேறுவதாக கூறுவது வதந்தி. மேலும், எனது அரசியல் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக வெளியான ஊகங்களும் பொய்’’ என்றார்.
முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து புதிய அரசு அமைத்துள்ள நிலையில், மாற்றப்பட்ட அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே பங்கஜா முண்டே பாஜவிலிருந்து விலக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது அவர் அதனை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
துருக்கியின் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்
மீண்டும் அமெரிக்காவில் தோன்றிய மர்ம தூண்
எரிவாயு ரகசியம்
'டியன்வென் - 1' விண்கலம்
உலகின் எடை மிக்க விலங்கு
புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது சீனா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்