SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீண்ட நேர பேட்டரி திறன் கொண்ட புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்: இந்தியாவில் அறிமுகம்

2019-12-04@ 17:01:05

ஹைஃப்யூச்சர் நிறுவனம் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டைடிபட்ஸ் ப்ரோ என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் 3000 எம்.ஏ.ஹெச். சார்ஜிங் கேஸ் உடன் வழங்கப்படுகிறது. இந்த கேஸ் 100 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குவதோடு போனினை சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. இயர்பட்ஸ்களில் 8 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் 75 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் வழங்கப்படும் 3000 எம்.ஏ.ஹெச். சார்ஜிங் கேஸ் கொண்ட இயர்போன்களை 10 முதல் 12 முறை முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

அந்த வகையில் இதை கொண்டு 100 மணி நேரத்திற்கு பேக்கப் பெறலாம். புதிய இயர்போன் ப்ளூடூத் 5.0 மற்றும் 10 மீட்டர் தூரம் வரை இணைப்பினை சாத்தியப்படுத்துகிறது. இத்துடன் IPX4 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய இயர்போன் பேலன்ஸ்டு சவுண்ட் சிக்னேச்சர் மற்றும் இரைச்சலற்ற ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்த இயர்போனினை இயர்பட்ஸ்களில் உள்ள டச்பேட் கொண்டு இயக்க முடியும்.

இதில் ஒற்றை டச் மூலம் இசை, அழைப்புகள் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை இயக்க முடியும். வாடிக்கையாளர்களின் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில் இயர்பட்ஸ் வாங்குவோருக்கு மூன்றுவித அளவுகளில் இயர் டிப்கள் வழங்கப்படுகின்றன. டைடிபட்ஸ் ப்ரோ இயர்பட்ஸ் வைட் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 4,499 என்றும் அமேசானில் ரூ. 4,199 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colum_ellaiii1

    எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

  • chinaaa_scieen11

    உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

  • marathon_dogggg1

    482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

  • 29-01-2020

    29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • coronaa_chinnnaa1

    ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்