SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பயன்படும் தொழில்நுட்பங்கள்

2019-12-03@ 16:43:44

தெலங்கானா, தமிழ்நாடு, ஜார்கண்ட் என பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெண்கள் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, மோசமான முறையில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. எப்போதெல்லாம் பெண்களுக்கு எதிரான அநீதி இழைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இதற்கு காரணமானவர்களை தண்டிப்பது தொடங்கி, சமூக கட்டமைப்பு, கல்வி, குழந்தை வளர்ப்பு, ஆடை, பழக்கவழக்கம், அரசு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. அந்த வகையில், செலவே இல்லாமல் அல்லது சில ஆயிரங்கள் செலவில் பெண்களின் பாதுகாப்பை ஓரளவுக்காவது அதிகரிப்பதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றைய நாளில் செல்போன்கள் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவற்றின் பயன்பாடு நகரம், கிராமம், படிப்பறிவு உள்ளவர்கள், படிப்பறிவற்றவர்கள் என்று எவ்வித பாகுபாடும் இன்றி காணப்படுகிறது.

அந்த வகையில், நமது கைகளில் பெரும்பாலான வேளைகளில் இருக்கும் செல்போனில் 'அவசரகால அழைப்பை' பயன்படுத்தி நீங்கள் உதவியை (காவல்துறை அல்லது தனிப்பட்ட நபர்கள்) நாட முடியும். பெரும்பாலான செல்போனில் உள்ள 'பவர் பட்டனை' மூன்று அல்லது ஐந்து முறை விட்டுவிட்டு அழுத்துவதன் மூலம் இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த முடியும். இதன் மூலம், நீங்கள் யாரை அழைக்க விரும்புகிறீர்கள் என்பதை உங்களது தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்ய முடியும். ஒருவேளை மேற்கண்ட முறை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலோ அல்லது வேலை செய்யவில்லை என்றாலோ 'Women safety apps' என்று உங்களது கூகுள் பிளே ஸ்டோரிலோ அல்லது ஆப்பிள் ஆஃப் ஸ்டோரிலோ தேடி நல்ல, நம்பகமான செயலியை திறன்பேசியில் பதிந்துகொள்ளுங்கள். இதுபோன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம், இன்னும் பல்வேறுபட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

உதாரணமாக, உங்களது செல்போனை ஒரு குறிப்பிட்ட முறைகள் அசைப்பதன் மூலமாக, நீங்கள் தெரிவு செய்த நபர்களுக்கு உடனடியாக எழுத்து/குரல்/காணொளியுடன் கூடிய குறுஞ்செய்தி உங்களது இருப்பிடம் (ஜிபிஎஸ்) குறித்த தகவலுடன் பகிரப்படும். நீங்கள் விரும்பும் பட்சத்தில் உங்களது இருப்பிடத்தை எந்நேரமும், விரும்பும் சிலருடன் பகிர்ந்து கொள்ளும் வசதிகளையும் பல்வேறு செயலிகள் வழங்குகின்றன. இதுபோன்ற பல்வேறு வசதிகளை கொண்ட செயலிகளை அனைத்து இயங்கு தளங்களிலும் இலவசமாகவும், சில நூறு ரூபாய் செலவிலும் பயன்படுத்த முடியும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colum_ellaiii1

  எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

 • chinaaa_scieen11

  உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

 • marathon_dogggg1

  482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்