SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனியார் நிறுவனங்களின் செல்போன் சேவைக் கட்டணங்கள் 50% வரை உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

2019-12-03@ 11:02:50

சென்னை: ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவனங்களின் 50% வரையிலான சேவை கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, தொலைத்தொடர்பு சேவையில், ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களே அதிக வாடிக்கையாளர்களை கொண்டு முககிய பங்காற்றி வருகின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், புதிததாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியிலும் அவ்வப்போது புதுப்புது பிளான்களை போட்டி போட்டு அறிவிப்பது வழக்கமாக இருந்து வந்தது. இதனால் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் கடன் சுமைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்கள், தங்களது செல்போன் மற்றும் இன்டர்நெட் டேட்டா சேவைகளின் கட்டணத்தை 50% வரை உயர்த்தியுள்ளன.

இதனால் 199 ரூபாய்க்கு மாதம் தோறும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்து வந்த ஒருவர், இனிமேல் 300 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இலவச அழைப்புகளை வரம்பில்லாமல் வழங்கி வந்த ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள், தற்போது அதற்கும் உச்சபட்ச வரையறையை நிர்ணயித்துவிட்டன. அதன்படி 28 நாட்கள் கொண்ட பிளானுக்கு 1000 நிமிடங்களும், 84 நாட்களை கொண்ட திட்டத்திற்கு 3000 நிமிடங்களும், ஓராண்டு பிளானுக்கு 12,000 நிமிடங்கள் மட்டுமே இலவசமாக பேச முடியும். அதை தாண்டினால், ஒவ்வொரு நிமிடத்திற்கும் 6 காசுகள் வீதம் கட்டணம் செலுத்த நேரிடும். ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவனங்களை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவும் 6ம் தேதி முதல் சேவை கட்டணத்தை 40% உயர்த்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colum_ellaiii1

    எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

  • chinaaa_scieen11

    உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

  • marathon_dogggg1

    482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

  • 29-01-2020

    29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • coronaa_chinnnaa1

    ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்