SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விருந்து நிகழ்ச்சியில் புகுந்து குற்றவாளிகள் சுட்டதில் ஒன்பது பேர் பரிதாப சாவு

2019-12-03@ 00:24:11

சவோ பாவ்லா: போலீசார் துரத்தியபோது, விழாக்கூட்டத்தில் புகுந்துக் கொண்ட குற்றவாளிகள், கூட்டத்தில் இருந்தபடி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அப்பாவிகள் 9 பேர் உயிரிழந்தனர்.பிரேசில் நாட்டின் சவோ பாவ்லா நகரில் நேற்று முன்தினம் போலீசாரிடம் சிக்காமல் இருசக்கர வாகனத்தில் 2 குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிப்பதற்காக பின்னாலேயே போலீசார் துரத்தினர். போலீசார் துரத்தி வருவதைக் கண்ட குற்றவாளிகள், அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சினிமாவில் வரும் சம்பவம்போல், அங்கு நடந்து கொண்டிருந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் புகுந்து கொண்டனர். அதில் பெருமளவிலானவர்கள் கூடியிருந்ததாக தெரிகிறது.

ஆனால், அங்கு போலீசார் வந்து குற்றவாளிகளை தேட ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த குற்றவாளிகள், கூட்டத்தில் இருந்தவாறு போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட பரபரப்பால் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண், பெண்கள் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினர். இதில் குற்றவாளிகளின் துப்பாக்கி குண்டு பாய்ந்து 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 15க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த பரபரப்புக்கு இடையே அவர்கள் போலீசாரிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-09-2020

    18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • birthdayceleb17

    இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

  • guinness17

    2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

  • amavasai17

    மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

  • modiji17

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்