SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூரியனை மிக அருகில் ஆய்வு செய்ய திட்டம்!

2019-12-02@ 14:34:59

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

சூரியனை மிகவும் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோலார் ஆர்பிட்டர் அல்லது சோலோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், தன்னை புதன் கோளின் சுற்றுவட்டப் பாதையினுள் நிறுத்திக்கொண்டு, அங்கிருந்து சூரியனின் பரப்பை ஆய்வு செய்ய தனது தொலைநோக்கியைத் திருப்பும். இதிலுள்ள பிற கருவிகள், சூரியனிலிருந்து வெளியேறும் துகள்கள் மற்றும் அவற்றின் காந்தப்புலம் ஆகியவற்றை கவனிக்கும்.

இந்த விரிவான ஆய்வு சூரியனின் செயல்பாட்டை நன்கு புரிந்துகொள்ள உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்தச் செயல்பாடு 11 ஆண்டு சுழற்சியில் பலரின் கவனத்தையும் ஈர்க்கும். இது ஒரு ஆய்வு மட்டுமல்ல, புவியில் வாழும் அனைவருக்கும் நேரடியான தொடர்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும்.

 சூரியனிலிருந்து வெளியாகும் திடீர் ஆற்றல் சீற்றங்கள், செயற்கைக் கோள்களை சேதப்படுத்தும், விண்வெளி வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும், மின்தொடர்களை செயலிழக்க வைக்கும் வலிமையுள்ளவை.

‘’அறிவை வளர்த்துக்கொள்ள மட்டும் இதனை நாம் செய்யவில்லை. சூரியப் புயல்கள் வெளியாகும்போது செயற்கைக் கோள்களை பாதுகாப்பு நிலைக்குத் திருப்பவும், அதுபோன்ற நேரத்தில் விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்தைவிட்டு வெளியேறாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும் இந்த ஆராய்ச்சி உதவும்’’ என சோலோ ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானி டானியல் முல்லர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colum_ellaiii1

    எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

  • chinaaa_scieen11

    உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

  • marathon_dogggg1

    482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

  • 29-01-2020

    29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • coronaa_chinnnaa1

    ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்