SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெஸ்ட் கேட்ஜெட்ஸ்

2019-12-02@ 14:12:34

நன்றி குங்குமம் முத்தாரம்

‘குழந்தையைப் போல் தூங் குங்கள்’ என்ற அடைமொழியுடன் இந்த வருடம் வெளியாகிசக்கைப்போடு போட்டிருக்கிறது லெனோவாவின் ஸ்மார்ட் கிளாக். இதன் வடிவமே மனதை அள்ளுகிறது. கூகுள் அசிஸ்டெண்ட்டுடன் இயங்குவதால் இதில் பல்வேறு வசதிகள் இருக்கின்றன. அலாரம் செட் செய்துவிட்டால் சரியான நேரத்தில் உங்களை எழுப்பி விடுவதோடு வீட்டிலுள்ள மற்ற ஸ்மார்ட் டிவைஸ்களையும் இதனால் கட்டுப்படுத்த முடி யும். இந்த கடிகாரத்திலேயே விருப்பமான பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம்.

டிஜிட்டல் நோட்பேட்

பள்ளிக்குழந்தைகள், எழுத்தா ளர்கள், ஓவியர்களை மனதில் வைத்து டிஜிட்டல் நோட்பேடை உருவாக்கியிருக்கிறது ‘ஹோப்ஸ்’ நிறுவனம். கேன்வாஸில் ஓவியம் வரைவது போலவும், நோட்புக்கில் குறிப்புகளை எடுத்துக் கொள்வதைப் போலவும் இந்த டிஜிட்டல் நோட்பேடில் நாம் செய்யலாம். 12 இன்ச் அளவுள்ள இதனை எங்குவேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும். அமேசானில் இதன் விலை ரூ.1,199.

மேஜிக்கல் மலர்க் குவளை


நம்மைக் கவர்ந்திழுக்கிறது  இந்த  மலர்க் குவளை. இதிலிருக்கும் செடியின் ஒரு இலையைத் தொட்டவுடன் பாடல் ஒலிக்கிறது. இன்னொரு இலையைத் தொட்டவுடன் பச்சை வண்ண விளக்கு ஒளிர்கிறது. இலையைத் தொடத் தொட பியானோ போல இசைக்கிறது. இந்த மலர்க் குவளையிலிருந்து பிடித்த பாடல்களைக் கேட்க முடியும். இதற்காகவே புளூடுத் ஸ்பீக்கரும் இதிலுள்ளது. இந்த மியூசிக்கல் குவளையின் விலை ரூ.739.

கிளாக் ஃபேன்


லேப்டாப்பின் முன்னாடி உட்கார்ந்துகொண்டு சில நிமிடங்கள் இருந்தாலே போதும். உடம்பும் மனதும் ஃபேன்காற்றைத் தேடும். அப்போது அருகிலிருந்து யாராவது விசிறி வீசினால் நன்றாக இருக்கும் தானே. இதற்காகவே வந்திருக் கிறது கிளாக்ஃபேன். யூஎஸ்பி வசதியுடன் இருப்பதால் லேப்டாப்பில் பொருத்திக் கொள்ள முடியும். ஃபேன் ஓடும் போது நேரத்தையும் இதில் பார்த்துக்கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colum_ellaiii1

  எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

 • chinaaa_scieen11

  உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

 • marathon_dogggg1

  482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்