SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் உத்தரவை குப்பையில் போட சொன்ன அமைச்சரின் அதிரடியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-12-02@ 01:05:06

‘‘மழைக்கு வெளியே போகாமல் வீட்டிற்குள்ளேயே படுத்துட்டு இருக்கீங்க... ஆனால் ஒரு கடைக்கு போறதுக்கு மட்டும் வெயிலும் கிடையாது... மழையும் கிடையாது...’’ என்று சிரித்தபடி சொன்னார் பீட்டர் மாமா.
‘‘டாஸ்மாக் கடைகளில் தான் இடியே இடித்தாலும் ெவள்ளமே வந்தாலும் கூட்டம் அலைமோதும்... ஆனால் அல்வா மாவட்டத்தில் மாமூல் என்ற கூட்டம் அலைமோதுவதால் ஊழியர்கள் பாடாய் படுகிறார்கள்... அதாவது, நெல்லை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரு நாள் விற்பனை ஒரு லட்சமா, 5 ஆயிரம் கொண்டு வா..., ஒருநாள் விற்பனை 2 லட்சமா, 10 ஆயிரம் கொண்டு வா.. என கடை ஊழியர்களை மேலதிகாரி மிரட்டுகிறாராம். மாதம் மாமூல் வரவில்லை என்றால் கண்டிப்பாக விற்பனை இல்லாத பஸ்களே அதிகம் செல்லாத இடங்களில் உள்ள கடைகளுக்கு அல்வா மாவட்ட டாஸ்மாக் அதிகாரி டிரான்ஸ்பர் செய்துவிடுகிறாராம். ஊழியர்கள் விற்பனையை குறைத்து காட்டினால் ஏன் குறைகிறது என்று அதற்கும் டிரான்ஸ்பர்... அதிகரித்தால் மாமூல் அளவு உயர்த்தப்படுவதால் ஊழியர்கள் இலக்கை எட்டி நல்ல பெயர் வாங்குவதா... அதிகாரிக்கு அதிக மாமூல் தருவதா என்று புலம்பி தள்ளுகின்றனர். அதிகாரியின் அத்துமீறலுக்கு அடி கொடுக்க அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களும் இணைந்து விரைவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன...’’ என்றார் விக்கியானந்தா.


‘‘ வருமா... வராதா என்ற ஏக்கத்தில் தூங்கா நகர மக்கள் இருக்காங்களாமே, ஏன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ மதுரையில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 10 மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமான பணி இன்னும் அடிக்கல்லை தாண்டி, நகராமல் தூங்குதாம். மத்தியில் ஆட்சி அமைந்து 180 நாள் நிறைவடைந்த நிைலயில் இதுவரை ரூ.5 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாம். இந்த நிதியை வைத்து எதுவும் செய்ய முடியாது என்று மருத்துவத்துறையினர் புலம்புகின்றனர். மதுரையில் எய்ம்ஸ் அமைய குரல் எழுப்பியவர்கள் தலைநகர் டெல்லி வரை சென்று தமிழக பெண் அமைச்சரை சந்தித்தபோது ‘எய்ம்ஸ் வரும். ஏன் அவசரப்படுறீங்க. 3 ஆண்டில் வரும்’ என நறுக்கென பதில் சொல்லி அனுப்பி விட்டாராம். இதை கேட்டு ‘நிதியே அளிக்காமல் அது எப்படி 3 ஆண்டில் எப்படி எய்ம்ஸ் சாத்தியமாகும் என்று அந்த குழு புலம்பியபடி ஏமாற்றத்துடன் மதுரை திரும்பியதாம். அதுமட்டுமில்ல, டெல்லி செல்லும் தமிழக அமைச்சர்களும் எய்ம்ஸ் குறித்து வாய் திறப்பது இல்லையாம். தென் மாவட்ட மாஜி மத்திய அமைச்சரும் தேர்தல் தோல்விக்குப்பிறகு மவுனமாகி போனாராம்... இதனால எய்ம்ஸ் வருமா, வராதா என்று மக்கள் மட்டுமில்லாமல் மருத்துவ வட்டாரத்திலும் புலம்பல் கேட்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ முதல்வர் அமைச்சர் மோதலை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூனைக்கு மீசை முளைத்தால் தன்னை புலி என்று நினைத்து கொள்வது போன்ற சம்பவம் தான் புதுச்சேரியில் நடந்து இருக்கு. அதாவது, புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வரும் வவுச்சர்  ஊழியர்கள் 1311 பேர் தங்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் நாராயணசாமி ஒருவாரத்துக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுப்படும் என அதிகாரிகள் மூலம் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை ஊழியர்கள் கைவிட்டனர். அதன் பிறகு தான் டிவிஸ்டே... போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மறுநாள் வேலைக்கு சென்றபோது  இனிமேல் வேலைக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் தடுத்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த வவுச்சர் ஊழியர்கள் பொதுப்பணித்துறை குடிநீர் தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்தினர். அரசு தரப்பில் இருந்து யாரும் பேச்சுவார்த்தைக்கு வராத நிலையில், எம்எல்ஏக்கள் அவர்களிடம் பேசி ஏழரை மணி நேரமாக நடந்த போராட்டத்தை வாபஸ் பெற வைத்தனர். முதல்வரின் வாக்குறுதியை மீறி அதிகாரிகள் வேலைக்கு வர வேண்டாம் என கூறுவதற்கு காரணம் தெரியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. சம்மந்தப்பட்ட அந்த துறையின் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு தெரிவிக்காமல், முதல்வர் வாக்குறுதி கொடுத்துவிட்டாராம். இதனால் கடுப்பான அமைச்சர், வவுச்சர் ஊழியர்களை வேலைக்கு வந்தால் வீட்டுக்கு அனுப்பி விடுமாறு கூறிவிட்டார். எனக்கு தெரியாமல் ஒருவரை கூட பணிக்கு சேர்த்துக்கொள்ளக்கூடாது என கடும் கோபத்துடன் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கவர்னர் கிரண்பேடி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக முதல்வர் கூறிவரும், நிலையில் அமைச்சர் ஒருவர் தனது துறைக்கு முதல்வர் எப்படி உத்தரவு போடலாம் என எதிர்ப்புகுரல் கொடுத்து, முதல்வரின் உத்தரவை குப்பையில் போடச் சொல்லியுள்ளார். இதனால் புதுச்சேரி அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போட்டோ போஸ் தான்... தினசரி நடவடிக்கையில் இது முடியாது... என்று சொன்ன அதிகாரி பற்றி சொல்லுங்களேன்..’’என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மாநகராட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர் சமீபத்தில் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி கழிவுகள் அகற்றும் பணிகளை பார்வையிட்டார். அப்போது பத்திரிகையாளர்கள், ‘மார்க்கெட்டில் தினமும் இதுபோன்று குப்பைகளை அகற்றினால் சுத்தமாக இருக்குமே’ என்றனராம். அதற்கு தலைமை பொறுப்பில் உள்ளவர், ‘இதெல்லாம் சும்மா.... தினமும் இதுபோன்று சுத்தம் செய்ய முடியுமா?, சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்தால் எப்படி குப்பைகளை அகற்ற முடியும்’ என்றாராம். அதுமட்டுமில்லாமல் சாலை சரியில்ல, குண்டும் குழியுமாக இருப்பதாக ‘மக்கள் ஆயிரம் புலம்புவாங்க, அதற்கெல்லாம் நாம என்ன செய்ய முடியும்? இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டுட்டு போய்கிட்டோ இருக்க வேண்டும்’ என்று சொல்லி சிரித்தாராம்...’’ என்று வேதனையுடன் தெரிவித்தார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colum_ellaiii1

  எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

 • chinaaa_scieen11

  உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

 • marathon_dogggg1

  482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்