SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீட்டர் மாமா

2019-11-30@ 00:48:09

‘‘விஐபி, விவிஐபி ஜோதிடர்களுக்கு கிராக்கி திடீர்னு ஏன் அதிகமாச்சு...’’என்றார் பீட்டர் மாமா.

‘‘அதுமட்டுமில்ல... கேரள ஜோதிடர்களுக்கும் மாந்திரீகர்களை தமிழகத்தில் இருந்து நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக சொல்றாங்க... எல்லாம் உள்ளாட்சி தேர்தலுக்காகத்தான். மாங்கனி சிட்டியில் இலைக்கட்சிக்காரங்க, எப்படியாவது கவுன்சிலராகி விட வேண்டும் என்று பல வழிகளில் காய் நகர்த்தி வருகிறார்களாம். இதில் சவுண்டான மாஜி மேயர், தனக்கு சீட்டு கிடைக்குமா என்று தினம் ஒரு ஜோதிடரை நாடிச்செல்கிறாராம். மாங்கனி கார்ப்பரேஷன் 56, 57வது வார்டுகளில் மாஜியும், அவரது மனைவியும் தான், தொடர்ந்து ேபாட்டியிட்டாங்களாம். அப்படி ஜெயித்தவருக்கு துணை மேயர், பொறுப்பு மேயர், மேயர் என்று பல பதவிகள் கிடைத்ததாம். இந்த சென்டிமென்டில் தற்ேபாதும் அதே வார்டுகளை தக்க வைக்கணும். இதற்கு ஜோதிடத்தில் என்ன வழி இருக்கிறது. தடை ஏற்பட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர்களை கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கிறாராம் மாஜி.  அதுமட்டுமில்லாம கேரளாவை ஒட்டியுள்ள அரசியல்வாதிகள் கேரள ஜோதிடர்களையும், மாந்திரீகர்களையும் சந்தித்து கவுன்சிலர் சீட்டு, மேயர், நகராட்சி தலைவர் பதவி கிடைக்குமா என்று கேட்டு வருகின்றனர். ரஷ் காரணமாக அப்பாயின்மென்ட் வாங்கிக் கொண்டுதான் கேரள ஜோதிடர்களை பார்க்க முடிகிறதாம்..’’ என்று சொல்லி சிரித்தார் விக்கியானந்தா.

‘‘புதுச்சேரி நிலவரம் என்ன..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரி மேட்டர் என்றாலே வரும்... ஆனா வராது என்ற கதையாக தான் ஆளுங்கட்சி நிர்வாகத்தை நடத்தி வருது... ஆளுங்கட்சி ஒரு திட்டத்தை கொண்டு வந்தால்... துணை நிலை ஆளுநர் நிறுத்தி விடுகிறார். இந்நிலையில் வாரிய தலைவர் பதவி விவகாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. எம்எல்ஏ உள்ளிட்ட 25 பேருக்கு வாரிய தலைவர் பதவிக்கான பட்டியலை, காங்கிரஸ் மேலிடத்தின் ஒப்புதலுக்காக தந்திருக்கிறார். விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், கவர்னருக்கு முறைப்படி அனுப்பி வைக்கவுள்ளார். ஆனால் இதற்கு ஒப்புதல் தருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். ஏற்கனவே கட்சிக்காரர்களுக்கு பதவி வழங்கக்கூடாது, அரசு சார்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது என தெரிவித்திருந்தார். எப்படியிருந்தாலும் எம்எல்ஏக்களுக்கு வாரியம் கிடைப்பதில் எந்த தடையும் இருக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அனந்தராமனுக்கு சுற்றுலா, தீப்பாய்ந்தானுக்கு பாட்கோ, வெங்கடேசனுக்கு புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறதாம். சட்டமன்ற தேர்தலை தைரியமாக சந்திக்க கட்சிக்காரர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் நாராயணசாமி இருக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘கொசுவலை ரெய்டில் கொசு சிக்கியதா இல்லை என்பது தெரியல... ஆனால் அதற்கு காரணமானவர்கள் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கரூரில் ஐடி ரெய்டு நடந்துள்ளது. ஆனால் இந்தமுறைதான் போலீஸ் பாதுகாப்புடன் நடந்ததாம். கரூரில் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி கொசுவலை தயாரிப்பது குறித்து ஆரம்பம் முதலே பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளர்கள் 2017ம் ஆண்டு முதலே புகார் அளித்து வந்த வண்ணம் இருந்தனர். வேளாண்மைத்துறையின் கட்டுப்பாட்டில் வந்ததால் சென்னை வேளாண்மைதுறை செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்டதாம். உடனே அவர், இது தொடர்பாக கரூர் இணை இயக்குனருக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாராம். இதில் கண்டுகொள்ளாமல் விட்ட அந்த இணை இயக்குனர், விவிஐபி ஒருவருக்கு ரொம்பவே நெருக்கமாம். இந்த கொசுவலைகளை உள்நாட்டில் விற்பனைசெய்யக்கூடாது என்பதையும் மீறி விற்பனை செய்து பலகோடி சம்பாதித்துள்ளனர். கெமிக்கல் கொசுவலையை நெதர்லாந்து நாட்டுக்கு ஆர்டரை கொடுத்து அந்த சரக்கை ஜார்கண்ட் மாநிலத்திற்கு திருப்பி கொடுத்து பலகோடி வரை சம்பாதித்தது ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டதாம்..

ஆரம்பத்தில் இந்த கெமிக்கல் கொசுவலை தயாரிப்புக்கு உடந்தையாக இருந்த இணை இயக்குனர் பற்றி இப்போதுதான் தகவல் கொஞ்சம் கொஞ்சமாக கசிய ஆரம்பித்துள்ளதாம்... தேனிகாரருக்கு நெருக்கம் என கூறிக்கொண்டு வலம் வந்த அந்த இணைஇயக்குனர் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஓய்வு பெற்றாராம்..

எனினும் அந்த இணை இயக்குனர் முக்கிய பங்கு, அதன் மூலம் விவிஐபி உள்ள தொடர்பு போன்றவற்றை விசாரிக்கவேண்டும் என குரல்கள் ஓலிக்க ஆரம்பித்துள்ளதாம்.. இதில் சிக்கியவர்களின் தரப்போ, அப்படியே இருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. விவிஐபியும், அவரது வாரிசும் சொல்வதைத்தான் மேலிடமே கேட்கும். எத்தனையோ ரெய்டுகள் நடந்தது போலத்தான் இதுவும் ஒரு சாதாரணமானது என்று கூலாக சொல்கின்றனர் கட்சியினர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோட்டை வட்டார செய்தி ஏதுமிருக்கா..’’

 ‘‘தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அதனால் புதிய உள்துறைச் செயலாளர் பதவிக்கு எஸ்.கே.பிரபாகர், சாய்குமார், ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோரிடையே கடுமையான போட்டி இருந்ததாம். அதில், கடைசியாக பிரபாகர், சாய்குமார் மட்டுமே போட்டியில் இருந்தார்களாம். சாய்குமார், முதல்வரின் அலுவலகத்தில் வேலை செய்கிறார். எடப்பாடியும் சாய்குமாரைத்தான் டிக் செய்தாராம். ஆனால், அவர் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாராம். இதனால் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் எஸ்.கே.பிரபாகருக்கு வாய்ப்பு அதிகமாம். இதற்கான உத்தரவு இன்று மாலைக்குள் வந்து விடுமாம்’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colum_ellaiii1

  எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

 • chinaaa_scieen11

  உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

 • marathon_dogggg1

  482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்