வளைகாப்பு விழா திட்டம் 1912ல் துவக்கினார் ஜெயலலிதா : ஓபிஎஸ் பேச்சால் அதிர்ச்சி
2019-11-29@ 00:05:18

தேனி. : தேனியில் நடந்த விழாவில் பங்கேற்ற துணைமுதல்வர் ஓபிஎஸ், வளைகாப்பு விழா திட்டத்தை 1912ல் ஜெயலலிதா துவக்கியதாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தேனியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது, ‘‘சமுதாய வளைகாப்பு திட்டமானது ஜெயலலிதாவால் 1912-13ல் துவங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக நடந்து வருகிறது’’’ என்றார். சமுதாய வளைகாப்பு திட்டம் 2012-13ல் துவங்கப்பட்டது. அதை 1912-13 என ஓ.பன்னீர்செல்வம் கூறியதால் அதிமுகவினர், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்..! முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதை முழுமனதோடு வரவேற்கிறேன் : எல். முருகன்
அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்னல்களை மட்டுமே அனுபவித்தோம்
திருப்போரூர் தொகுதி பாமகவுக்கு: அதிமுகவினர் எதிர்ப்பு
வெள்ளை சட்டைக்கு கிராக்கி
நாங்க சிங்கக் கூட்டம் டிடிவி குள்ளநரிக் கூட்டம்: போட்டு தாக்கும் அமைச்சர் ஜெயக்குமார்
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!