SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உண்டியலில் பத்து பர்சென்ட் லஞ்ச பணத்தை போட்ட அதிகாரியை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2019-11-29@ 00:05:08

‘‘விழுப்புரத்துல என்ன வில்லங்கம்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுகவில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் லட்சுமணனுக்கு, எம்பி பதவியும் வழங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின்னர் அவரை ஓரங்கட்டி வைத்துள்ளாராம் உள்ளூர் அமைச்சர். கட்சி தலைமை மாநில அமைப்பு செயலாளர் பதவிகொடுத்து லட்சுமணனை அங்கீகரித்துள்ளதாம். அமைச்சரின் சூழ்ச்சியால் கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்ட அவர் தற்போது, மாவட்டம்தான் ரெண்டா பிரிஞ்சுடுச்சு, விழுப்புரம் மாவட்டத்தை கட்சி ரீதியா இரண்டாக பிரிக்க வேண்டும். கடலூரை மூன்றாக பிரிச்சதை போல, விழுப்புரம் மாவட்டத்தை வடக்கு, தெற்காக பிரித்து மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி வழங்க வேண்டும் என கேட்கிறாராம். லட்சுவின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக கட்சி தொண்டர்களே ஒத்துக்கிறாங்க... ஆனால் இடைத்தேர்தல் நாயகனான அந்த அமைச்சர் அதெல்லாம் முடியாது. ஒரே போஸ்டிங். அது எனக்கு மட்டும்தான்.. மற்றவர்கள் நினைச்சு கூட பார்க்கக் கூடாது என்று அதிரடியாக சொல்லிட்டாராம். இடைத்தேர்தல் நாயகனின் பேச்சை கேட்ட மாநில தலைமை தற்போது அமைதி காத்து வருகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அப்புறம்...’’ ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் முன்னாள் அமைச்சரும், மூன்றெழுத்து எம்எல்ஏவும் கட்சி ரீதியாக மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என பதவிக்காக இரண்டு பேரும் போட்டிப் போடறாங்களாம். எல்லா மாவட்டத்திலும் ரெண்டு, மூன்று பேர் மாவட்ட செயலாளர் இருக்கும்போது. இந்த மாவட்டத்தை ஏன் முதலமைச்சர் பிரிக்கக்கூடாதென்று மூத்த நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘இல்ல... ஆனா இருப்பதாக பணம் வசூலிக்கும் அந்த தில்லாலங்கடி அதிகாரி யாரு...’’ என்றார் பீட்டர் மாமா.‘தேனி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கான விடுதிகள் உள்ளன. இந்த விடுதி காப்பாளர்கள் அங்கு தங்கியுள்ள மாணவ, மாணவிகளை கவனிக்கிறார்களோ இல்லையோ, மாதம் பிறந்தா போதும், இத்துறையின் மாவட்ட ‘அமைதியான’ அதிகாரிக்கு விடுதிவாரியாக மாமூல் கலெக்ட் செய்து கவனிக்க வேண்டுமாம்... விடுதிகளில் கூடுதலாக உள்ளதாக கணக்கு காட்டப்படும் மாணவ, மாணவிகளின் மோசடி எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கப்படும் உணவு பொருள், ஒதுக்கீட்டின் மதிப்பில் பெருந்தொகையை மாவட்ட அதிகாரிக்கு ஒதுக்கணுமாம்...

இதேபோல ஆய்வு என்ற பெயரில் விடுதிகளுக்கு செல்லும்போது, விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளில் யாரேனும் விடுப்பு எடுத்திருந்தால், அந்த மாணவ, மாணவியரையும் ‘விடுதியில் இருப்பதாக கருதி பணத்தை கறந்து விடுவாராம். மாதந்தோறும் மாமூலை ஒரே இடத்தில் வைத்து வசூலிக்காமல், மாதம் ஒரு விடுதி, மாதம் ஒரு காப்பாளர் என பிரித்து மாமூல் வசூலித்து கொடுக்கணுமாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அபராதம் கட்டினால் அலைச்சல்... சரிகட்டினால் சாந்தம் என்று மருத்துவமனையில் மிரட்டி எங்கே பணம் வாங்குறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கான மருந்துகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, பீளமேட்டில் உள்ள அரசு மருந்து குடோனில் வைக்கப்படுகிறது. இப்படி வாங்கப்பட்ட மருந்து, மாத்திரை வகைகளில் அரசுக்கு 70 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தமிழக அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். நஷ்டம் ஏற்படுத்திய தொகையை, மாவட்ட அரசு கருவூலத்தில் செலுத்தவேண்டும் எனவும் தணிக்கைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, முதல்கட்டமாக, 25 லட்சம் ரூபாய் மாவட்ட அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள 45 லட்சம் ரூபாயை செலுத்தாமல் மருத்துவமனை நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது...

இதற்கிடையில், தணிக்கைத்துறை அதிகாரிகளை சரிக்கட்டி, அவர்களை வளைத்துவிட்டால் இந்த 45 லட்சம் ரூபாய் பாக்கியில் இருந்து தப்பித்து விடலாம் என சிலர் ஐடியா கொடுக்க, மருத்துவமனை நிர்வாகம் தணிக்கைத்துறை அதிகாரிகளை அணுகியுள்ளது. இதற்கு, கோவை மாநகரை சேர்ந்த ஆளும்கட்சி நடிகரின் கட்சியை ேசர்ந்த ஒருவர் துணை நின்றுள்ளார். அந்த அதிகாரிகளோ, லெப்ட்... ரைட்... வாங்கி விட்டதால், நடிகர் கட்சி உறுப்பினர் தலை தெறித்து ஓடிவிட்டார். மருத்துவமனை நிர்வாகிகளும், போன வேகத்தில் அப்படியே திரும்பி பார்க்காமல் வந்துவிட்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘அதிகார வர்க்க விவகாரம் ஏதுமிருக்கா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கோவை மாநகராட்சியில் ஒரு சில அதிகாரிகள் என்னதான் நெருக்கடி வந்தாலும், தங்களது வசூல் நிலைப்பாட்டில் இருந்து மாறுவதே இல்லை. தொடர்ச்சியாக, அளவுக்கு அதிகமாக வசூல் செய்த காரணத்தால் அதிருப்தியாகி, புகார் மேல் புகார் மனு செல்ல, நடப்பாண்டில் மட்டும் 2 உயரதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டு, மீண்டும் பணியில் சேருவது பெரும் போராட்டமாக இருக்கிறது.

இந்த புகைச்சல் ஓய்வதற்குள் இன்னொரு அதிகாரி தலைதூக்கி ஆட்டம் போட்டு வருகிறார். இவர், ஆளும்கட்சி கரை வேட்டிகளுடன் கைகோர்த்துக்கொண்டு, லஞ்சம் வசூலிப்பதில் படு கில்லியாக உள்ளார். சமீபத்தில் ஆளும்கட்சி முக்கிய புள்ளி ஒருவருக்கு லேண்ட் அப்ரூவல் விவகாரத்தை கச்சிதமாக முடித்துக்கொடுத்துள்ளார். இதற்காக, அவருக்கு 25 லகரம் அன்பளிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை, வாங்கிய அந்த அதிகாரி, நேராக திருப்பதிக்கு ரயில் ஏறிவிட்டார். உண்டியலில் பத்து பெர்சன்ட் பணத்தை போட்டுவிட்டு, ஏழுமலையானே... என்னை காப்பாத்துப்பா என வேண்டியுள்ளார். கோவை திரும்பியதும் இந்த தகவலை அவரே சக அதிகாரியிடம் உளறியுள்ளார். இந்த பேச்சுதான் மாநகராட்சி வட்டாரத்தில் சுற்றிச்சுற்றி உலா வருகிறது'' என்று முடித்தார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colum_ellaiii1

  எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

 • chinaaa_scieen11

  உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

 • marathon_dogggg1

  482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்