SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்ட பஞ்சாயத்தில் கொடிகட்டி பறக்கும் எம்எல்ஏக்கள் லிஸ்ட் தயாரிக்கும் போலீஸ் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-11-28@ 00:22:00

‘‘ரேஷன் கார்டிலும் கரன்சியை தேற்றிய ஜெகஜால கில்லடிகள் யாரு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘எல்லாம் விவிஐபி மாவட்டத்துல தான் இந்த கூத்து நடந்ததாம்... மாங்கனி மாவட்டத்தில் சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்ற ரேஷன் கடைக்கும் போகும் பொதுஜனம், அப்படியே அதிர்ச்சியில் இருக்காங்களாம். இதுக்கு இலைகட்சிக்காரங்க தான் காரணமாம்.. அதாவது பொங்கலுக்கு 1000 பரிசுத்தொகை மட்டுமில்லாம, தொழிலாளர் நிதியுதவி 2 ஆயிரம் என்று  ஏகப்பட்ட பெனிபிட் கார்டை மாற்றுவதால் கிடைக்கும். உடனடியாக வேலை நடக்கணுமா, ₹2ஆயிரம் குடுங்க என்று கூவிக் கூவி கேட்பது தான் அந்த கார்டுதாரர்களை அதிர்ச்சியில் தள்ளி உள்ளதாம். விவிஐபியின் சொந்த ெதாகுதியிலேயே இந்த குரல் ஓங்கி ஒலிக்குதாம். அதிலும் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட 26ம்தேதி, நடந்த அலப்பறைகளுக்கு அளவே இல்லையாம். உள்ளாட்சி ேதர்தல் வருதுங்க. அதனால் கட்சிக்காரங்க  உற்சாகமாக கூவுறதை தடுக்க முடியாதுங்க என்று புகார் ெதரிவித்த மக்களிடம் பதிலளிக்கிறார்களாம் மக்கள் பிரதிநிதிகள். அதுக்கு அப்புறம் கால நீட்டிப்பு அறிவித்தது வேறு விஷயம்...’’என்றார் விக்கியானந்தா.
‘‘பஞ்சாயத்தில் கொடிகட்டி பறக்கும் எம்எல்ஏக்கள் குறித்து சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் வெடிகுண்டுகளை சிறுவர்கள் விளையாடும் கோலி குண்டு பயன்படுத்துவதுதான் போலீசுக்கு பெரிய சவாலாக இருக்காம்... இன்னொரு விஷயம் ஒரு கொலையாளி இன்னொரு கொலையாளியை வெடிகுண்டு வீசி கொல்வதால் ஒருவன் ஒழிகிறான்... இன்னொருவன் தலையெடுக்கிறான். அவனை இன்னொருவன் கொல்கிறான்... இப்படி தொடர்ச்சியாக வெடிகுண்டுகளை வீசி கொல்வது புதுச்சேரி போலீசுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்காம். காரணம் என்கவுன்டர் என்ற வாடையே புதுச்சேரி போலீசுக்கு பிடிக்காது என்பதால், ரவுடிகள் ராஜ்ஜியம் தலைவிரித்தாடுகிறது. ரவுடிகளை ஒடுக்க யாராவது முன் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. குறைந்தபட்சம் தமிழகத்தை போல ரவுடிகளின் கை, காலை முறித்துவிடுங்கள் என்று மக்கள் கெஞ்சும் அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு இருக்கிறது. அதே நேரத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி கவர்னராக இருப்பதால், இவ்விஷயத்தில் தலையிடுவார் என நினைத்திருந்தனர். ஆனால் காவல்துறைக்கு யாரும் எதிர்பார்க்காத உத்தரவினை கவர்னர் போட்டிருக்கிறாராம். போலீசார் சுதந்திரமாக செயல்படாததற்கு அரசியல் தலையீடுதான் காரணம் என கவர்னருக்கு சிலர் போட்டுக்கொடுத்துவிட்டனர். காவல்நிலையத்தில் பஞ்சாயத்து செய்யும் எம்எல்ஏக்கள் பட்டியலை தரச்சொல்லி மறைமுக உத்தரவு பறந்திருக்கிறதாம்... அதனால் அதிர்ச்சியில் எல்லா கட்சிகளையும் சேர்ந்த எம்எல்ஏக்கள் இருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘அல்வா மாவட்டத்தில் கிப்ட் கட்சிய சேர்ந்தவரை தலைவர் பதவியில் இருந்து தூக்க இலை தரப்பு முடிவு செய்து இருக்காமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
 ‘‘மக்களவை தேர்தலுக்கு முன்பு நெல்லையில் வலுவாக இருந்த அமமுக பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் பல பதவிகளை கைப்பற்றியது. ஆனால் பதவியை பிடித்த அமமுகவினர் எல்லாம் மக்களவை ேதர்தலுக்கு பின்னர் மீண்டும் இலை கட்சியில் ஐக்கியமாகி விட்டனர். அதிமுகவில் முன்னாள் கவுன்சிலராக இருந்த மில்க் பிரமுகர் தற்போது அமமுகவில் அமைப்புச் செயலாளர் என்ற உயர் பதவியில் உள்ளார். இவர் தான் நெல்லை நகர கூட்டுறவு வங்கி தலைவர். ஆளுங்கட்சியினரை வீழ்த்தி விட்டு இந்த பதவியை பிடித்தார். ஆனால் அவருடன் வெற்றி பெற்ற இயக்குநர்கள் எல்லாம் மீண்டும் இலை கட்சியில் ஐக்கியமாக காட்சியும் மாறியது. அவர்கள் தற்போது ‘மில்க்'''' பிரமுகரின் பதவிக்கே வேட்டும் வைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து விட்டனர். கூட்டுறவு அதிகாரி தலைமையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கூட்டமும் நடத்தப்பட்டு உயரதிகாரிக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பதவி தப்புமா என மில்க் பிரமுகர் மட்டுமின்றி பதவியை கைப்பற்றிய மற்ற கூட்டுறவு வங்கி நிர்வாகிகளும் ஆழ்ந்த கவலையில் உள்ளனராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புது 2 ஆயிரம் நோட்டு... புது ரேஷன் கார்டு... கொழிக்கும் கோவை ஊழியரை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை தெற்கு வட்ட சிவில் சப்ளை அலுவலகத்தில் ‘பவர்’ வாய்ந்த ஒரு ஊழியர் பணிபுரிகிறார். இவரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டினால் போதும், காணாமல் போன விண்ணப்பம் உடனே கைக்கு வந்துவிடுகிறது, பென்டிங்... என கிடப்பில் போட்ட விண்ணப்பம் மேஜை மீது வந்துவிடுகிறது. எல்லா ஆவணங்களும் சர...சர..வென சரிபார்க்கப்பட்டு, கார்டு பிரிண்டிங் போய்விடுகிறது. அடுத்த வாரம் வந்து வாங்கிக்கோ... என ஒற்றை வரியில் ஆர்டர் போட்டு, காரியத்தை செய்துகொடுத்து விடுகிறார். இவரிடம் சென்றால், காரியம் நடக்குது... என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளதால், இந்த அலுவலகத்தில் நாள்தோறும் கூட்டம் குவிகிறது. ஸ்மார்ட் ரேஷன் கார்டுல, பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றுவது என எல்லா வேலையையும் இவரே செய்து கொடுத்து விடுகிறார். இதற்கு, ஆப் ரேட். இவர், மேலிடத்துக்கு கொடுக்க வேண்டியதை சரியாக கொடுத்து விடுவதால், இவர் மீது இதுவரை நடவடிக்கை பாயவில்லை... அரசு ஊழியர்கள் செய்ய தவறியதை 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செய்கிறதே என்று தலையில் அடித்தப்படி பொதுமக்கள் புலம்பி சென்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.     


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colum_ellaiii1

  எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

 • chinaaa_scieen11

  உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

 • marathon_dogggg1

  482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்