SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சி தேர்தலில் இலை கட்சி அடிமட்ட நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

2019-11-27@ 00:23:10

‘‘என்ன விசேஷம்... இலை கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கிறாங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இடிந்து போய் இருக்காங்க... மக்கள் செல்வாக்கு, வங்கியில் செல்வம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை என்பதால் அதிர்ச்சியில் இருக்காங்களாம்... இரண்டும் உள்ளவர்கள் மட்டுமே போட்டியிட இலை தரப்பு வாய்ப்பு தரும் என்று கறாராக  கூறிவிட்டதால்... அடிமட்ட தொண்டன் பிரசாரம், பிரியாணி என்று சாப்பிட்டுவிட்டும் பேசிவிட்டும் செல்ல வேண்டியதுதான்... இதனால மக்கள் செல்வாக்குள்ள தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்காங்க... அவங்கள சரிகட்டி ஓட்டு வாங்கி  கவுன்சிலர் ஆவது கஷ்டம்னு உள்ளூர் ஆட்கள் நினைக்கிறாங்க... அதனால அவங்களை மாவட்ட அமைச்சர் அல்லது மாநில தலைமை தனியாக அழைத்து குஷிப்படுத்த முடிவு செய்து இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘நாகர்கோவில்ல போக்குவரத்து பிரச்னை தீருமா... இன்னும் தலைவலியாக தான் இருக்குமா...’’ என்றார் பீட்டர்மாமா.‘‘நாகர்கோவில் மாநகராட்சியில் ₹10 லட்சத்துல ஸ்காட் நகர் சாலையில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணியில் 90 சதவீதம் முடிந்தது. இன்னும் ஒருநாள் பணி முடிந்தால் போக்குவரத்திற்கு தயாராகிவிடும் நிலை இருந்தது.  இதற்கிடையில் அப்பகுதியை ஆய்வு செய்த கமிஷனர் தரையில் பதிக்கப்பட்ட அலங்கார தரை கற்களை அகற்ற மறு உத்தரவிட்டார். சாலையில் பணி முடியும் முன்பே ஏன் இப்படி என்று குடியிருப்புவாசிகள் கேட்க, உங்களுக்கு கான்கிரீட் ரோடு  சேங்க்ஷன் ஆகியுள்ளது, அதனை பின்னர் செய்யலாம் என்று ஆணையர் கூலாக கூறினாராம். இவ்வாறு அழித்து அழித்து விளையாட இது என்ன சிறுவர்களின் மணல் வீடு கட்டும் திட்டமா? நொந்து போயினர் குடியிருப்புவாசிகள்.  வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஆணையர் மக்களின் பணத்தை வீணடிக்கலாமா என கேட்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க தங்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு தொடர் வேலைநிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்கின்றவர்களுக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுடன் ஏற்படுகின்ற மோதலும் தங்கி மீன் பிடித்தலில் பிரச்னைக்கு காரணம். இந்த சூழலில் உலக மீனவர் தின  விழாவில் பங்கேற்க நாகர்கோவில் வருகை தந்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் இப்பிரச்னையை உடன் பேசி தீர்க்க வேண்டும் என்று முறையிட சின்னமுட்டம் மீனவர்கள் வந்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருப்புக்கு பின்னர் அவர்கள்  அமைச்சரை சந்தித்தனர். மனுவை வாங்கிவிட்டு ‘நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று மட்டும் கூறிவிட்டு அமைச்சர் சென்றுவிட்டாராம். ஆனால் அவரது பதிலில் திருப்தியடையதாக மீனவர்கள் எங்கள் பிரச்னையின் தீவிரம் அவருக்கு எங்கே  தெரியப்போகிறது, இரண்டு நாளில் முடிவு எட்டாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று ஆவேசப்பட்டனராம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘சிவகங்கை விவசாயிகள் ஆளுங்கட்சி மீது ஏன் கோபத்தில் இருக்கிறாங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சிவகங்கை மாவட்டத்துல பெரியாறு பாசன நீரை எதிர்பார்த்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாம்... இந்த மாவட்டத்துல உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 6,800 ஏக்கர் நிலங்கள் பெரியாறு ஒருபோக பாசனப்பகுதியா  இருக்கு... ஆனால் பல ஆண்டுகளாக சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு பெரியாறு தண்ணீர் வழங்கப்படுவதில்லையாம்... இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்திற்கு சீல்டு, லெஸ்சிஸ், 48 கால்வாய், கட்டாணிபட்டி ஒன்று மற்றும் இரண்டு ஆகிய  கால்வாய்கள் வழி கடைமடை பகுதி வரை பெரியாறு நீர் திறக்கப்படும் என கூறப்பட்டதாம்.... ஆனால் வழங்கலையாம். இதையடுத்து அக். 22ல் சோழபுரத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினாங்களாம்... அதுக்காக அன்று மாலை  முதல் மிகக்குறைவாக 30 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டதாம்... அதுவும்  நவ. 7ம் தேதியுடன் அனைத்து கால்வாய்களிலும் நீர் திறப்பை நிறுத்திட்டாங்களாம்... இந்த நடவடிக்கையால் ஏமாற்றமடைந்த விவசாயிகள், நவ. 25ல் மதுரை  பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினாங்க... மிகக்குறைவான அளவு நீரைக்கூட ஆண்டுதோறும் தொடர்ந்து போராட்டம் நடத்தியே பெற வேண்டிய நிலையால், விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனராம்.  அது உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார்கள் விவசாயிகள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறையில் சிஸ்டம் பழுதா... சிறையின் சிஸ்டம் பழுதா...’’ என்று இடக்கு மடக்காக கேட்டார் பீட்டர் மாமா.‘‘சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்வதில் போலீசார் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். குறிப்பாக பயங்கர குற்றங்களில் ஈடுபட்டு விசாரணை கைதிகளாக உள்ளவர்களை நீண்ட  தொலைவில் உள்ள நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்வதில் சந்திக்கும் பிரச்னைகள் அதிகம். இதனை தவிர்க்க வீடியோ கான்பரன்ஸ் முறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை விசாரணை மேற்கொள்ளும் வசதி  தமிழக சிறைகளில் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் வேலூர் சிறையில் ஏற்படுத்தப்பட்டிருந்த வீடியோ கான்பரன்ஸ் சிஸ்டம் சில மாதங்களாக பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொலைதூரங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு  பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கைதிகளை அழைத்து சென்று வருகிறார்களாம் போலீசார். இதனை சிறைத்துறையும் கண்டுகொள்ளவில்லையாம். சில மாதங்களாகவே சிறை நிர்வாகம் ஒரு மாதிரியாகவே செயல்படுகிறது என்றே  கைதிகளை அழைத்து வர பணிக்கப்படும் போலீசாரும், சிறைக்காவலர்களும் புலம்புகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colum_ellaiii1

  எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

 • chinaaa_scieen11

  உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

 • marathon_dogggg1

  482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்