SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையை பிரியாணி மாவட்டமாக மாற்றிய தெர்மாகோல் அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-11-25@ 00:10:25

‘‘இலையின் பொதுக்குழுவில் என்ன விசேஷம்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிப்ட் தரப்பும் சிறை பறவை தரப்பும் சிறையில் இருந்து வெளியே வந்ததும் இலை தரப்பு அமைச்சர்கள், நிர்வாகிகள் எல்லோரும் தம் பக்கம் வருவார்கள். அதை பயன்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் ஆயிடுவார்... காரணம் இப்போதுள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்களில் பலர் இவரது சிபாரிசின் பெயரில்தான் பதவியில் உள்ளதாக வதந்திகள் இறக்கை கட்டி பறந்தன... சிறைபறவை வெளியில் வந்தாலும் யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் தனித்துவிடப்பட வேண்டும் என்று நினைத்துதான் உட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 வருஷம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக பதவியில் இருக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்து இருக்காங்க.. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிறைபறவை மற்றும் அவரது குடும்பத்தினரால் இன்னும் 5 வருஷத்துக்கு கட்சியில் எந்த லாபியும் செய்ய முடியாது... கிப்ட் தரப்பு ஸ்லிப்பர் செல்கள் மட்டுமில்லாமல் அங்கிருந்து தற்போது இலை கட்சிக்கு திரும்பியவர்களும் இன்னும் 5 வருஷத்துக்கு உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியாது... இதனால் கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும் என்ற தலைவலிக்கு நிரந்தரமாக குட்பை சொல்லியிருக்கிறார்கள் இரட்டையர்களான விவிஐபிக்கள்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘கிருஷ்ணகிரிகாரர் என்ன பேசினாராம்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘பக்கத்துக்கு இலைக்கு பாயாசம் ரகத்தில் இருந்ததாம் அவர் பேச்சு. கட்சி தொண்டர்களை யாருமே மதிப்பதில்லை.. அவர்கள் இல்லையென்றால் நீங்கள் இல்லை... தொண்டர்களை மதிக்காமல் மற்ற கட்சியினரை மதிக்கிறீர்கள்... இப்படியே போனால் கட்சியே காலியாகிவிடும் என்று தன்னை கட்சியின் முக்கிய பதவியில் உள்ளவர்கள் மதிக்காததை சுட்டிக்காட்டி ஆவேசமாக பேசி அமர்ந்துட்டாராம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘தூங்கா நகரம் இட்லிக்கு தான் பேமஸ்னு நினைச்சா... இப்போது பிரியாணிக்கும் பேமஸா...’’ என்று வியப்போடு கேட்டார் பீட்டர் மாமா.‘‘உள்ளாட்சி தேர்தல் வரை கட்சிக்காரர்கள், வாக்காளர்களை கட்சி நிர்வாகிகள் எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்று பல்வேறு ஒத்திகைகளை பார்த்து வர்றாங்க... அதுல ஒன்று தான் இந்த பிரியாணி சமாச்சாராம்... மக்களிடம் மனுக்களை வாங்கும் அமைச்சர்கள் அதை படித்துகூட பார்க்காமல் வேகமாக காரில் ஏறி போறதுதான் வழக்கம். ஆனால், உள்ளாட்சி தேர்தல் வருது இல்லையா... இதனால தூங்கா நகர அமைச்சர் ஒருவர் புது டெக்னிக்கை கையில் எடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் மேடையில் நின்று மனுக்கள் வாங்குவது, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என திடீரென மக்கள் மீது பாசமழை பொழிகிறார். மனுவை படிக்கிறாரோ இல்லையோ... மனு கொடுத்தவர்களிடம் மேடைக்கு பின்னால் பிரியாணி, தயிர் சாதம் வைச்சிருக்கோம்... உட்கார்ந்து சந்தோஷமாக சாப்பிட்டுட்டு போங்க... உங்க மனு மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்... பிரியாணியை மறக்காதீங்க என்று அன்போடு சொல்கிறாராம். அதுமட்டுமில்லாமல் ‘அறுசுவை உணவு தயாராக இருக்கு. அனைவரும் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்’ என திருமண விழாவில் அழைப்பது போல ஒலிபெருக்கியிலும் அன்புக்கட்டளையிடுகிறாராம்.... தூங்காநகரம் முழுவதும் இதுபோலவே நடப்பதால் உள்ளாட்சி தேர்தல் வரை பிரியாணி நகரம்னு தான் அழைக்கணும் என்று சொல்லி சிரிக்கிறார்கள் அரசு அதிகாரிகள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கமிஷன் கைகள் முதியோரையும் விட்டுவைக்கவில்லையாமே...’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா. ‘‘வேலூர் அடுத்த கணியம்பாடி ஒன்றியம் அமிர்தியை ஒட்டிய ஊராட்சியின் முன்னாள் தலைவர் முதியோர் உதவித்தொகை, நலிந்தோர் உதவித் தொைகயை வாங்கித் தருகிறேன்னு சொல்லிட்டு 200 பேரிடம் மனுவும் அத்துடன் தலா 6 ஆயிரம் ரூபாயும் வாங்கி குவித்துவிட்டாராம். இந்த கதையை கேட்ட கணியம்பாடி ஒன்றியத்தை சேர்ந்த மற்ற ஊராட்சிகளை சேர்ந்த இலை கட்சியினர்  வேதனையும் கோபமும் பட்டாங்களாம். இலை கட்சியில் கருணை அதாவது வயதானவங்க கிட்ட எப்படி வசூல் செய்யலாம் என்று கேள்வி கேட்கவில்லை... எங்க பார்டர்ல எப்படி நீ வசூல் செய்யலாம். அதுக்கு தான் நாங்க இருக்கோம். வாங்கிய பணத்தை எங்களிடம் கொடு என்று வயதானவங்ககிட்ட வாங்கிய பணத்தில் பங்கு கேட்டு சண்டை போடறாங்களாம்... மேலிடம் வரை புகார் போயும் யாரும் இவரை கண்டுக்கொள்ளவில்லையாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘கல்வித்துறையில என்ன நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கல்வித்துறைக்கும், குழப்பத்துக்கும் பஞ்சமே இல்லாம போயிட்டு இருக்கிறதா, ஆசிரியர்கள் பரபரப்பா பேசிக்கிறாங்க. சமீபத்துல பள்ளிக்கல்வித்துறை கமிஷனர்னு புதுசா ஒரு பதவிய உருவாக்கி, பெண் அதிகாரிய நியமிச்சாங்க.

இதனையடுத்து, ஆசிரியர்கள் சங்கம் மற்றும் துறை சார்ந்த அமைச்சு பணியாளர் சங்க நிர்வாகிங்க கூட, புதிய கமிஷனர் கலந்துரையாட போறதாகவும், இதுக்காக 26ம் தேதி எல்லோரும் சென்னை வாங்கன்னும், அழைப்பு விடுக்கப்பட்டதாம். இதனால ரொம்ப நாளா பெண்டிங்ல இருக்குற கோரிக்கைய, புது அதிகாரிகிட்ட சொல்லி தீர்த்துக்கலாம்னு மாங்கனி மாவட்டத்து சங்க நிர்வாகிங்க, குஷியில இருந்தாங்களாம். ஆனா, நிர்வாக காரணம்னு சொல்லி, திடீர்னு கூட்டத்த ஒத்தி வைக்கிறோம்னு அறிவிச்சுட்டாங்களாம். மேலிடத்துக்கு தெரியாம கூட்டம் அறிவிச்சதால ரத்து செஞ்சிட்டாங்கனு, வாத்தியாருங்க பரபரப்பா பேசிக்கிறாங்க. அதுமட்டுமில்லாம, கூட்டத்துல பொறுப்பாளருங்க கேட்குற கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு, ஏடாகூடமா ஏதாவது கருத்து சொல்லிட்டா, அது வரப்போற உள்ளாட்சி தேர்தலுக்கு பாதிப்ப ஏற்படுத்திடும், இப்போ கூட்டம் எதுவும் வேணாம்னு உத்தரவு வந்ததாம். இப்போ இந்த விவகாரம் தான், வாத்தியாருங்க வாட்ஸ்-அப்ல பரபரப்பா ஓடிக்கிட்டு இருக்கு...’’ என்றார் விக்கியானந்தா.     


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colum_ellaiii1

  எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

 • chinaaa_scieen11

  உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

 • marathon_dogggg1

  482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்