SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சி தேர்தலை முடக்க நடக்கும் உள்ளடி வேலைகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-11-24@ 00:35:21

‘‘கொசு கடியிலும் கவுன்சலிங்கில் பங்கேற்ற அதிகாரி பற்றி ெசால்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ மாநிலம் முழுசும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான டிரான்ஸ்பர் மற்றும் புரோமோசன் கவுன்சிலிங் கடந்த 15 நாளா நடந்துச்சு. இதுல கடைசியாக நடந்த இடைநிலை ஆசிரியர் கவுன்சிலிங், எல்லோருக்கும் பெரிய தலைவலியா போச்சாம். மொத்தம் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவங்க கலந்துக்கிட்டதால, 21ம் தேதி மாலை தொடங்குன கவுன்சிலிங், 23ம் ேததி அதிகாலை 3 மணிக்கு தான் முடிஞ்சதாம். இரவு, பகல்னு இல்லாம, தொடர்ந்து 34 மணிநேரம் நடந்த மராத்தான் கவுன்சிலிங் காரணமா, கல்வித்துறை அதிகாரிங்க கதிகலங்கி போயிட்டாங்க. பல மாவட்டங்கள்ல கவுன்சிலிங் நடத்த வேண்டிய சிஇஓக்கள், பொறுப்ப டிஇஓ-கிட்ட ஒப்படைச்சுட்டு வீட்டுக்கு போயிட்டாங்களாம். ஆனா, மாங்கனி மாவட்டத்து சிஇஓ, யாரையும் நம்பாம இருந்த இடத்த விட்டு நகரவே இல்லயாம். அதுவும் அதிகாலை நேரத்துல கொசுவர்த்திய பத்த வச்சுகிட்டு, கவுன்சிலிங் நடந்த தனியார் பள்ளிக்கூட தரையிலேயே குட்டி தூக்கமும் போட்டாராம். கொசுக்களும் வத்திக்கு பயந்து ஓடிப்போச்சாம்... அதே சமயம் அதிகாரியோட பொறுப்ப பாத்து, மாங்கனி மாவட்ட ஆசிரியருங்க சிலாகித்து போயிருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சியின் தீர்மானங்கள் எல்லாம் ரெடியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வழக்கம்போல சில இரங்கல் தீர்மானம்... கட்சியின் நிறுவனர், கட்டி காப்பாற்றியவர்களை பாராட்டி தீர்மானம்... இரட்டையர்களின் சாதனைகள் பற்றிய தீர்மானம்... இடைத்தேர்தல் வெற்றி தீர்மானம்... தாமரையின் ‘பவர்’ தலைவரை பாராட்டி தீர்மானம் என்ற வகையில்தான் இருக்கப்போகுதாம்... மற்றபடி உள்ளாட்சி தேர்தலில் வேற்றுமையை மறந்து பணியாற்றி வெற்றி கனி பறிப்போம் என்று மட்டுமே இருக்குமாம்... தமிழக வளர்ச்சி பற்றி மட்டுமே இருக்குமாம்... இது ஒரு சம்பிரதாய கூட்டமாக மட்டுமே கூடி களைவதாக இருக்கும் வகையில் முன்கூட்டடியே சொல்லப்பட்டுவிட்டதாம்... வருபவர்களுக்கு அறுசுவை உணவும் சென்னை சுற்றுலாவும் உண்டாம்... மற்றபடி அரசியல் விஷயங்கள் பெரிய அளவில் இருக்காது என்கின்றனர் இலை தரப்பில் உள்ள முக்கிய நபர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெயிலான ஊரில் ஒரு பிடிஓ வசூலில் செம கலக்கு கலக்குகிறாராமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூரில் இருந்து உதயமாக உள்ள மாவட்டத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள மாதனூர் ஒன்றியத்தில் கிள்ளியான அதிகாரி வசூலில் கில்லியாக இருக்கிறாராம். இந்த ஒன்றியத்தில் உள்ள 16 ஊராட்சிகளில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், 100 நாள் வேலை திட்டம் என பல திட்டங்கள் நடக்குதாம். இதில் நாய்க்கனேரி, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு, குருவராஜபாளையம், வேப்பங்குப்பம் என பல ஊராட்சிகளில் கடந்த 15 நாட்களில் ₹3 லட்சம் வரை கில்லி மாதிரி வசூலித்து விட்டாராம். இதற்காகவே இவர் முகாம் என்ற பெயரில் அரசு வாகனத்தில் கிளம்பி விடுவாராம். இவரை வருவது குறித்து கேட்டாலே சில ஊராட்சி செயலாளர்கள் ‘‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ சென்றுவிடுகிறார்களாம். சிக்குபவர்களிடம் ஊராட்சியின் 9 பதிவேடுகளை காட்ட சொல்லி, ஒவ்வொன்றையும் காட்டி இதெல்லாம் செய்துள்ளீர்களே, எனக்கு எதுவும் வரவில்லையே என்று மிரட்டி வசூலிக்கிறாராம்....’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ வேறு என்ன மேட்டர் இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘விழுப்புரம் கூட்டுறவுகடன் சங்கத்தில் பதவி உயர்வுக்கு பல லகரத்தை அள்ளுகிறார்களாம் இலை தலைவர்கள், செயலாளர்களும் கூட்டுசேர்ந்து. இவ்விவகாரம் பிரளயத்தை கிளப்பி உள்ளதாம். காணை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்களில் சீனியர்களுக்கு எழுத்தர்பணியிடம் வழங்கவேண்டும். ஆனால் புதிதாக பணியில் சேர்ந்த பெண்ணிடம் பல லகரம் பெற்றுக்கொண்டு இலை தலைவரும், சங்க செயலாளரும் எழுத்தர் பணியிடம் கொடுத்தாங்கலாம். இடைத்தேர்தலின்போது விதிகள்அமலில் இருந்தபோதும் அதனைபொருட்படுத்தாமல் பல லகரத்துக்காக பதவி உயர்வு வழங்கி ஒரு மாதசம்பளமும் கொடுத்துட்டாங்க. இதுபோன்ற மேலும் பல கூட்டுறவு கடன் சங்கத்தில் பெண்களிடம் லகரத்தை பெற்று இலை தலைவர்கள், செயலாளர்கள் பதவி உயர்வு கொடுத்தாங்களாம். இந்த ஆதாரங்களுடன் கூட்டுறவுத்துறைஅதிகாரிகளுக்கு புகார்கள் பறக்க, பதற்றத்தில் இருக்காங்களாம் இலை தலைவர்களும், செயலாளர்களும்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘இலை தலை செய்த முறைகேடு என்பதால்... இதுவும் கடந்து போகும்... உள்ளாட்சி தேர்தல் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று முதல்வர், அமைச்சர்கள் ஒரு பக்கம் கூறி வருகிறார்கள். இன்னொரு பக்கம், உள்ளாட்சி பதவிகளில் மேயர், நகராட்சி மற்றும் நகராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் மூலமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகராட்சியில் வார்டு பிரிப்பதில் மற்றும் இடஒதுக்கீட்டை கடைபிடிப்பதிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் பார்த்தால், உள்ளாட்சி தேர்தலை நடத்த இலை கட்சி அரசுக்கு ஆர்வம் இல்லை என்றே தெரிகிறது. நீதிமன்ற உத்தரவுபடி எப்படியும் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் உள்ள குளறுபடிகளை பட்டியலிட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆளுங்கட்சியின் தீவிர ஆதரவாளராக உள்ள `தமிழ்’’ என்ற அடைமொழி கொண்ட தலைவரை வைத்து வழக்கு போட ஏற்பாடு நடைபெறுகிறதாம். இதற்கு இலை தலைவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் முழு சப்போர்ட் செய்துள்ளதாக பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.¡

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்