SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்வியில் முதலிடம் பிடித்த மாவட்டம் இப்ப வேற விஷயத்துல முதலிடத்துக்கு போகிற கதையை சொல்கிறார்: wiki யானந்தா

2019-11-23@ 05:01:18

‘‘சவுடு மண்ணில் கோடிக்கணக்கில் காசு பார்க்கிறார்களாமே ஒப்பந்ததாரர்கள்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அரக்கோணம் தாலுகாவில் தணிகைபோளூர், சித்தேரி உட்பட பல ஊராட்சிகளில் ஏரி, குளங்களில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. இதில் குளம் தூர்வார ₹1 லட்சம் தான் அதன் மதிப்பீடு என்றாலும், அதை விட மிக அதிகமாக செலவு செய்து குளத்தை 20 அடி ஆழம் வரை தூர்வாருகிறார்களாம் ஒப்பந்ததாரர்கள். அதேபோல் ஏரிகளிலும் தூர்வாரப்பட்டு சவுடு மண்ணும், மொரம்பு மண்ணும் அள்ளப்பட்டு லாரிகள் மூலம் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விற்பனை செய்யப்படுகிறதாம். இதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் பார்த்து வருகிறார்களாம் ஒப்பந்ததாரர்கள். இதனை சம்பந்தப்பட்ட கனிமவளத்துறையும் கண்டுகொள்வதில்லையாம். பொதுப்பணித்துறையும் கண்டுகொள்வதில்லையாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘உள்ளாட்சி தேர்தலால் நெல்லையில் தொல்லையாமே..’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு காலம் கடத்தி வந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளை கைப்பற்ற அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் காய் நகர்த்தின. குறிப்பாக தாமரை கட்சிக்கு தமிழகத்தில் பெரிய செல்வாக்கு இல்லாத போதிலும், முக்கிய நகரங்களின் மேயர் பதவியை கைப்பற்ற தேசிய கட்சியினர் காய் நகர்த்தினர். கோவை, நாகர்கோவில், நெல்லை போன்ற மூன்று மேயர் பதவிகளை தாமரை கட்சியினர் குறி வைத்தனர். அதிமுகவில் இருந்து மாறி தேசிய கட்சியில் ஐக்கியமான மாஜி அமைச்சர் ஒருவருக்கு நெல்லை மேயர் பதவியின் மீது ஒரு கண் இருந்ததாம். அரசியலில் பதவி இல்லை என்றால் காணாமல் போய் விடுவோம். அதனால் தற்போது இருக்கும் பதவியை கைப்பற்றிக் கொள்வோம் என அவர் நினைத்தாராம். ஆனால் அதற்குள் தமிழக அரசு மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. இதனால் இலை கட்சியினர் மீது தேசிய கட்சியினர் கடும் காட்டத்தில் இருக்கிறார்களாம். ஏற்கெனவே வேலூர் மக்களவை தேர்தல், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் தாமரை கட்சியை அதிமுக கண்டு கொள்ளவில்லையாம். வேண்டா விருந்தாளியை இனியும் கூட்டணியில் வைக்க வேண்டாம் என இலை தலைவர்கள் கருதுகிறார்களாம். அதன் எதிரொலி தான் அவசர சட்டமாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கல்வியில் முதலிடத்தை பெற்ற விருதுநகர் மாவட்டம், இப்போ வேற ஒரு விஷயத்துல முதலிடத்தை நோக்கி போகுதாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘அது உனக்கும் தெரிஞ்சு போச்சா... கல்வியில் முதலிடத்தை கோட்டை விட்ட நிலையில், விருதுநகர் மாவட்டத்துல எந்த ஆய்வுக்கூட்டமும் நடத்தலையாம்.. ஆனால், மாவட்டத்துல சுற்றுச்சூழல் மன்றங்களை கவனிக்க வேண்டிய அதிகாரி, அதில் கவனம் செலுத்துவதை கைவிட்டு, விட்டு முதன்மை கல்வி அலுவலரை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனது சொந்த காரில் அழைத்து செல்கிறாராம்... இவர் பள்ளிக்குள் நுழைந்ததும் பெட்ரோல் செலவு என ரூ.5 ஆயிரம் வசூலிப்பாராம். கேட்ட உடன் தந்து விட்டால் பள்ளிக்கு சிக்கல் இல்லையாம். இல்லாவிட்டால் பள்ளிக்கு குடைச்சல் கொடுப்பாராம்...
அரசு உதவி பெறும் பள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பணம் வரும் வரவுகளை எல்லாம் இவரே முன்னின்று நடத்துகிறாராம்... அதில் குறிப்பிட்ட தொகையை மேலிடத்திற்கு கொடுத்து விட்டு முழுவதையும் வாரி சுருட்டுகிறாராம்.
கல்வித்துறையில் தனியார் பள்ளிகளின் வசூலை கவனிக்க இவருக்கு கீழ் சில புரோக்கர்கள் வேற இருக்கிறார்களாம்... இவர்கள் மூலம் பணம் போய் சேரும் பைல்கள் மட்டும் டேபிளை விட்டு நகருதாம்... மற்ற பைல்கள் எல்லாம் தூங்குதாம்.... உதவிபெறும் பள்ளிகள் நிர்வாகிகள் தற்போதைய பண வசூலை பார்த்து கண் கலங்குறாங்களாம்... பிற துறை வசூலை விட கூடுதல் வசூல் செய்து கல்வித்துறை முதலிடத்தை பெற வேண்டுமென்ற நோக்கில் காய்களை நகர்த்தி வருகிறார்களாம்.... இதற்கு மாவட்ட கல்வி அலுவலர்களும் உடந்தையாக இருக்கிறார்களாம்... பள்ளி கல்வித்துறை ஆணையரான பெண் ஐஏஎஸ் அதிகாரியின் கவனத்திற்கு இதை கொண்டு செல்லும் வகையில் நேர்மையான அலுவலர்கள் தங்களது காய்களை நகர்த்தி வருகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியில்
கவுன்சிலர் சீட் வரை இறங்கி வந்திருக்காங்களாமே மாஜிக்கள்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுனு அறிவிச்சதால், மாங்கனி மாநகராட்சியில் இலை கட்சி சார்பில் மேயர் சீட் கேட்டு விண்ணப்பித்த 67 பேரும், கவுன்சிலர் சீட் கேட்டு புதிய விருப்பமனுக்களை கொடுத்துருக்காங்களாம். இதுல மாஜி எம்பி ஒருத்தரும், மாஜி மேயர் 2 பேரும், மாஜி எம்எல்ஏக்கள் 2 பேரும் கவுன்சிலர் சீட் போட்டி களத்தில் இறங்கியிருக்காங்க. இதனால அந்தந்த வார்டில் நமக்கு சீட் கிடைக்குமுனு நம்பி விருப்பமனு கொடுத்த வார்டு செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் பீதியடைந்துள்ளார்களாம். ஏற்கனவே உயர்ந்த பதவியில் இருந்த இவர்களே மீண்டும் பதவிக்கு வரணுமுனு, இப்படி கவுன்சிலர் சீட் வரைக்கும் இறங்கி வாராங்களேன்னு, தமிழக விவிஐபி மாவட்ட அதிமுகவில் ஒரே புலம்பலா இருக்காம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colum_ellaiii1

  எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

 • chinaaa_scieen11

  உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

 • marathon_dogggg1

  482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்