SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து திணறல்

2019-11-23@ 04:32:23

மவுன் மவுங்கானுயி: இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து திணறி வருகிறது. பே ஓவல் மைதானத்தில் நடக்கு இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாளான நேற்று அந்த அணி 353 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (124 ஓவர்). பர்ன்ஸ் 52, சிப்லி 22, டென்லி 74, பென் ஸ்டோக்ஸ் 91 ரன் (146 பந்து, 12 பவுண்டரி), போப் 29, பட்லர் 43, லீச் 18* ரன் எடுத்தனர்.

நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ 4, வேக்னர் 3, கிராண்ட்ஹோம் 2, போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர்.  அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்துள்ளது (51 ஓவர்). ராவல் 19, லாதம் 8, கேப்டன் கேன் வில்லியம்சன் 51, டெய்லர் 25 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். நிகோல்ஸ் 26, வாட்லிங் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சில் சாம் கரன் 2, லீச், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.  கை வசம் 6 விக்கெட் இருக்க, நியூசிலாந்து அணி இன்னும் 209 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்