SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விதிமுறை மீறி ஊழியர்கள் நியமன புகார் எதிரொலி கோயில்களின் கூடுதல் பொறுப்பு பறிப்பு

2019-11-22@ 01:07:13

சென்னை: தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்னை மண்டலத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.  இத்துறையின் அனுமதி பெற்றே புதியவர்களை நியமிக்க வேண்டும். ஆனால், பல கோயில்களில் லட்சக்கணக்கில் பணம் பெற்று ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த உயரதிகாரி தொடர்பாக  ஏராளமான புகார்கள் கமிஷனருக்கு சென்றது. சமீபத்தில் கமிஷனர் பணீந்திர ரெட்டி  உயரதிகாரியிடம் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் செயல் அலுவலர்கள் 7 பேரிடம் இருந்து கூடுதல் பொறுப்புகளை பறித்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கச்சாலீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் பாஸ்கரனிடம் இருந்த ஓட்டேரி செல்லப்பிள்ளை ராயர் கோயில் பொறுப்பு ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் செயல் அலுவலர் நற்சோனையிடமும், சூளையில் சுந்தரராஜ பெருமாள் கோயில் பொறுப்பு சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ராஜா பெருவழுதியிடமும், கோமளீஸ்வரன் பேட்டை கோமளீஸ்வரர் கோயில் பொறுப்பு நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் தமிழ் செல்வியிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் பாண்டியராஜூவிடம் இருந்த வண்ணாரப்பேட்டை காமாட்சியம்மன் கோயில் பொறுப்பு பச்சையம்மன் கோயில் செந்திலிடமும், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் அருட்செல்வனிடம் இருந்த அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயில் பொறுப்பு வண்ணாரப்பேட்டை கிருஷ்ண பரமாத்மா கோயில் நாரயணியிடமும், தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் செயல் அலுவலர் ஜெயராமனிடம் இருந்த போரூர் ராமநாதீஸ்வரர் கோயில்  பொறுப்பு கேகே.நகர் சக்தி விநாயகர் கோயில் செயல் அலுவலர் லதாவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முல்லா சாகிப் தெருவில் உள்ள அரங்கநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் பிரகாஷிடம் இருந்த என்எஸ்சி போஸ் ரோடு சிவசுப்ரமணியசாமி கோயில் பொறுப்பு ராயபுரம் அங்காளபரமேஸ்வரி கோயில் செயல் அலுவலர் விமல் குமாரிடமும், எழும்பூர் சீனிவாசன பெருமாள் கோயில் செயல் அலுவலர் ரமணியிடம் இருந்த மேற்கு மாம்பலம் கோதண்டராமசுவாமி கோயில் பொறுப்பு மாதவரப்பெருமாள் கோயில் செயல் அலுவலர் கேசவராஜனிடமும், முத்தியப்பன் தொரு வரதராஜ மனவாளமகாமுனி கோயில் பொறுப்பு வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் செயல் அலுவலர் நித்தியானந்தனிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்