கோயம்பேடு பஸ் நிலையத்தில் 300 கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்: கூடுதல் கமிஷனர் தகவல்
2019-11-22@ 00:06:10

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சமீபகாலமாக வழிப்பறி, செயின், செல்போன் பறிப்பு, கஞ்சா விற்பனை மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும், என பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோயம்பேடு பஸ் நிலையத்தில் குற்றச் சம்பவங்கள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகளின் முகங்களை துல்லியமாக கண்டறிய 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மாதங்களில் 300 கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவுபெறும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, கோயம்பேடு போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனரா என்றும் ஆய்வு செய்தார். குற்ற சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் போலீசார் மாறுவேடங்களில் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
பழவேற்காட்டில் கரை ஒதுங்கியது டால்பின்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல்: அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட திட்டம்
தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா: இன்று 775 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை..!
முதல் நாள் என்பதால் சில சிக்கல் இருந்தது: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை: விஜயபாஸ்கர் பேட்டி..!
கொரோனா தடுப்பூசி போடுவது ஒரு சவால்தான், தோல்வியில்லை: இதுவரை 3,000 பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து குஜராத்தில் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள் : நாளை பிரதமர் மோடி திறந்து வைப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்