எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடத்திற்காக 75 மரங்களை வெட்ட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
2019-11-22@ 00:06:09

சென்னை: எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக, பழமையான 75 மரங்களை வெட்ட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் எழும்பூரை சேரந்த கேப்டன் பி.பி.நாராயணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எழும்பூர் கண் மருத்துவமனை மிகப்பெரிய பழமையான கண் மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், மருத்துவமனையை விரிவுப்படுத்தும் வகையில் கூடுதல் கட்டிடங்களை கட்டப்படுகிறது. இதற்காக, வளர்ந்து பெரிதாக உள்ள 75 மரங்களை வெட்டுவதற்கு மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த மரங்களில் பல வகையான பறவைகள் வாழ்ந்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கீரிப்பிள்ளை போன்ற விலங்குகளும் இந்த பகுதியில் வசிக்கின்றன. மேலும், இந்த மரங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. மருத்துவமனை விரிவாக்கம் அவசியம்தான்.
அதே நேரத்தில் பசுமையான இந்த மரங்களை வெட்டாமல் அதே வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் கட்டிடங்களை கட்டலாம். எனவே, எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 75 மரங்களை வெட்டக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 75 மரங்களை வெட்ட தடை விதிக்கப்படுகிறது. அதே வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் புதிய கட்டிடங்களை கட்டுவது குறித்தும், இந்த மரங்களை மருத்துவமனை வளாகத்தில் வேறு இடத்திற்கு மாற்றி நடுவது குறித்தும் திட்டம் உள்ளதா என்பது குறித்து அரசு பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும் செய்திகள்
72-வது குடியரசு தினம்..! சென்னை கோட்டையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்: சிறப்பு விருதுகளை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி
கோவை மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணம் சிபிசிஐடி விசாரணை நடத்த முதல்வருக்கு திமுக வலியுறுத்தல்
அகில இந்திய குடிமைப்பணி நுழைவுத்தேர்வு முடிவுகள் 27ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் மக்கள் பார்வைக்கு 28ம் தேதி திறப்பு: முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கிறார்
தொழிற்சாலை பணிகளில் சிறுவர்களை சேர்த்தால் கடும் நடவடிக்கை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை
புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்