பள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு
2019-11-20@ 12:51:13

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பள்ளி மற்றும் கல்லூரி அருகேயுள்ள கடைகளில், புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளதால், உணவு பாதுகாப்புத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த வாரத்தில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி அருகே மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் செயல்படும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு புகையிலை பொருட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தற்போது கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் மீண்டும் புகையிலை விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சுப்புராஜ், செல்வபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் உடுமலை ரோடு மற்றும் வால்பாறை ரோடு, மீன்கரை ரோடு, கோவை ரோடு, பல்லடம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, மளிகைக்கடை, டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, சுமார் 36 கடைகளில் தடை செய்யப்பட்ட 21 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கடைகளுக்கு, தடை செய்யப்பட்ட விதிமீறி புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை நோட்டீசை, அதிகாரிகள் வழங்கினர். பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் மாத்திரை போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது ஆய்வு பணி மேற்கொண்டாலும், தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: வழக்கு விசாரணை மார்ச் 5க்கு ஒத்திவைப்பு
காங்கிரஸை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை :புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம்; படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!!
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு: துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு
ஆல் பாஸ் அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை-பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!