சீப் அண்ட் பெஸ்ட் விலையில் மெகா டிஸ்பிளே போன்!
2019-11-20@ 12:18:03

சீப் அண்ட் பெஸ்ட் விலையில் ‘ரெட்மி 8’ என்ற மாடலை களமிறக்கி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது ‘ஷியோமி’. 720 X 1520 பிக்ஸல் ரெசல்யூசனில், 6.22 இன்ச்சில் மெகா டிஸ்பிளே, 12 எம்பியில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மெயின் கேமரா, 2 எம்பி யில் டெப்த் சென்சார் பொருத்தப்பட்ட இன்னொரு கேமரா என்று இரண்டு பின்புற கேமராக்கள், செல்ஃபிக்குத் தனியாக 8 எம்பியில் ஒரு கேமரா, 3 ஜிபி மற்றும் 4 ஜிபி என இரண்டுவிதமான ரேம்கள், 5000mAh திறன் கொண்ட பேட்டரி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபியில் இன்பில்ட் மெமரி, குறைவான எடையில் மெலிதான வடிவமைப்பு என அசத்துகிறது இந்த போன்.
வெளியான 91மொபைல்ஸ் அறிக்கையின்படி, ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாடல் ஆனது ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே வாங்க கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,799 என்று நிர்ணயம் செய்யப்படும், இந்த அளவிலான விலை நிர்ணயம் ஆனது மற்ற ரெட்மி நோட் 8 மாடல்களை விட மிகவும் மலிவானது என்பது குறிப்பிடத்தக்கது. நினைவூட்டும் வண்ணம், ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது ரூ.9,999க்கும் மற்றும் இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் ஆனது ரூ.12,999க்கும் வாங்க கிடைக்கிறது. இந்த இரண்டுமே (4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் பதிப்புகள்) ஆஃப்லைன் மற்றும் பிளாஷ் சேல் வழியாக ஆன்லைன் ஸ்டோர்களிலும் வாங்க கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
விவோ ஒய்12எஸ் (விலை சுமார் ரூ.9,990)
கார்மின் விவோ ஆக்டிவ் (விலை சுமார் ரூ.3,999)
எல்ஜி ஏர்பட்ஸ் விலை சுமார் ரூ/24,990 முதல்
சாம்சங் ஏர் டிரெஸ்ஸர் (விலை சுமார் ரூ.1.10 லட்சம்)
தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவந்தது வாட்ஸ் ஆப்..!!
அதிக திறன் கொண்ட இன்டல் சிபியுக்கள்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்