ஏர் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக லண்டன் சென்றார் நவாஸ் ஷெரீப்
2019-11-20@ 04:29:56

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்Z லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானதை தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஆனால், வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் நவாஸ் பெயர் இடம் பெற்றதால் அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்ல முடியவில்ைல. எனவே, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ரூ.700 கோடியை பிணைத்தொகை செலுத்த அரசு நிபந்தனை விதித்தது. இதை எதிர்த்து, லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஷெரீப் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசின் நிபந்தனைகளை நிராகரித்ததோடு, நவாஸ் ஷெரீப் 4 வாரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தது. இதையடுத்து, மருத்துவ வசதிகள் கொண்ட விமானமான ஏர்ஆம்புலன்ஸ் மூலமாக ஷெரீப் நேற்று லண்டன் புறப்பட்டு சென்றார்.
மேலும் செய்திகள்
இலங்கையில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்க சுதந்திரமான தனி அமைப்பு: ஐநா.வுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்
கியூபா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை
பதவியேற்ற முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: 20ம் தேதி அதிபராகும் பிடென் அறிவிப்பு
நார்வேயில் பயங்கரம்: தடுப்பூசி போட்ட 23 முதியோர் பலி
திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யாவும் விலகியது: குறைகளை களைய முடியவில்லை என குற்றச்சாட்டு
பதவியேற்ற முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: 20ம் தேதி அதிபராகும் பிடென் அறிவிப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்