கூட்டணியில் இருந்து வெளியேறி ரஜினியுடன் அணி சேர்ந்தால் பாஜவுக்கு தான் இழப்பு: அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை பேட்டி
2019-11-20@ 03:19:39

சேலம்: எங்கள் கூட்டணியில் இருந்து பாஜ வெளியேறி, ரஜினியுடன் கூட்டணி அமைத்தால் கவலையில்லை. அப்படி நடந்தால் அவர்களுக்குத்தான் இழப்பு ஏற்படும் என்று அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை கூறியுள்ளார். தமிழகத்தில் சிறந்த ஆளுமைக்கான வெற்றிடம் உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘எங்கய்யா இருக்கு வெற்றிடம்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி ெகாடுத்தார். இதையடுத்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினி, ‘தமிழக முதல்வர் ஆவார் என்று 2 வருடங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கனவில் கூட, நினைத்திருக்க மாட்டார்” என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து ரஜினிக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ெசம்மலை எம்எல்ஏ, ரஜினி குறித்தும் பாஜக கூட்டணி குறித்தும் அதிரடியாக கருத்து ெதரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செம்மலை கூறியதாவது:
பாஜவுக்கு தனிக்கொள்கை இருக்கிறது. அதிமுகவுக்கு தனிக்கொள்கை உள்ளது. இருவரும் கொள்கையில் மாறுபட்டு இருக்கிறோம். ஆனால் பாஜவுடனான கூட்டணி நீடித்து வருகிறது. அதே நேரத்தில், ரஜினியுடன் கூட்டணி அமைப்பதற்காக பாஜ வெளியேறினால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அப்படி நடந்தால் அவர்களுக்குத்தான் இழப்பு ஏற்படும். இவ்வாறு செம்மலை எம்எல்ஏ கூறினார். தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதித்துவ பங்கீடுக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இந்நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செம்மலை எம்எல்ஏ தெரிவித்துள்ள கருத்து பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா தீவிர அரசியலில் குதிக்க முடிவு
மதிமுகவில் நிர்வாகிகள் நியமனம்: வைகோ அறிவிப்பு
புதுவையில் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் தயாராகவே இருக்கிறோம்: திருப்பூரில் கே.எஸ்.அழகிரி பேட்டி
தூய்மை பணியாளர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி
பாஜ ஒட்டிய பேனரை கிழித்த அதிமுக பிரமுகர்
சொல்லிட்டாங்க...
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!