அதிகாரிகளை மிரட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்: ஆளுநர் கிரண்பேடி ஹிட்லரின் தங்கை...புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
2019-11-19@ 14:37:05

புதுச்சேரி: அதிகாரிகளை தினந்தோறும் வசைபாடும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஹிட்லரின் தங்கை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஒரே மகளான இந்திராகாந்தி, இந்தியாவின் இரும்பு பெண்மணி என போற்றப்படுகிறார். லால் பகதூர் சாஸ்திரி கடந்த 1966-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் இந்திரா நாட்டின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார். 1966 முதல் 1977 வரை மற்றும் 1980 முதல் 1984 ல் இறக்கும் வரை பிரதம மந்திரி பதவியில் இருந்தார். 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பிறந்த இந்திரா காந்தி, கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதியன்று, அவரது பாதுகாவலர்களாக இருந்த இரண்டு சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102- வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராணயசாமி, எந்தவித அதிகாரங்களும் இல்லாமல் அதிகாரிகளை மிரட்டுவது போன்ற செயல்களில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், மாநில மக்களையும், வளர்ச்சியையும் பற்றி கவலைப்படாமல் கிரண்பேடி, தர்பார் நடத்திவருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகள்
‘மேடம் சீப் மினிஸ்டர்’ பட விவகாரம்; பாலிவுட் நடிகை மீது வழக்கு: அரியானா போலீஸ் நடவடிக்கை
கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பீதி
உடல்நலம் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதி...! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
ஆணுறுப்பை தொட சொன்ன இயக்குனர்: பாலிவுட் கவர்ச்சி நடிகை ‘மீடூ’-வில் பரபரப்பு புகார்
75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள் ஒவ்வொரு குடும்பமும் சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் : பிரதமர் மோடி
வரும் 27ம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில், சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்.... அதிர்ச்சியில் அமமுகவினர்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!