SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்தலுக்காக அதிகாரிகளை பயன்படுத்தி ஆட்களை இழுக்கும் வேலையை செய்யும் ஆளும்கட்சி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-11-18@ 02:00:51

‘‘என்ன வண்டியை தள்ளிட்டு வர்ற...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தள்ளிட்டு வரலாம்... தள்ளாடிட்டு வர்றதுதான் தப்பு...’’என்றார் பீட்டர் மாமா.
‘‘டாஸ்மாக் மேட்டருக்கு வர்ற... சொல்றேன்... தமிழகம் முழுவதும் டாஸ்மாக் அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்  பணியிடங்கள், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பட்டதாரிகள் தேர்வு செய்ய ஆகஸ்ட் 18ம் தேதி நடந்தது. இதுல் 500 பேர் தேர்ச்சி பெற்றதாக  பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, செப்டம்பர் மாதம் நடந்து முடிந்து விட்டது... இவர்களுக்கு அக்டோபர்  மாதத்திற்குள் பணிநியமன உத்தரவு வந்து விடும் என சென்னை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அலுவலகம் தெரிவித்தது.

ஆனால், அக்டோபர் மாதம் முடிந்து, நவம்பர் மாதம் 3வது வாரம் வந்து விட்டது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டும், இன்னும்  நியமனம் செய்யப்படவில்லை... தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், தங்களுக்கு எப்போது பணி நியமன உத்தரவு வரும் என எதிர்பார்ப்புடன்  காத்திருக்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘முக்கியமான பேப்பர் அதுல இல்ல... அதனால அதை அப்படியே போட்டு வைச்சு இருப்பாங்க... அது  அரசு நிகழ்ச்சியை ஓட்டு சேகரிப்பு நிகழ்வாக விவிஐபி மாவட்டத்துல அதிகாரிகள் மாத்திட்டாங்களாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ இது நடந்தது எல்லாம் விவிஐபி மாவட்டத்தில் தான். உள்ளாட்சி தேர்தல் வருவதால் மாங்கனி மாவட்டத்தில், தொகுதி வாரியாக முதியோர்  உதவித்தொகை கொடுப்பதில் அதிகாரிகள் தீவிரம் காட்டியிருக்காங்களாம். சமீபத்தில் உள்ளூருக்கு வந்த தமிழக விவிஐபி, போட்ட உத்தரவால் சிறப்பு  குறைதீர் முகாமில் பெற்ற மனுவில் ஒன்றைக் கூட பெண்டிங் வைக்கக்கூடாது. உள்ளாட்சி தேர்தல் வருவதால், முதியோர், விதவை,  மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை கேட்ட அனைவருக்கும் கொடுத்துருங்கனு சொல்லிட்டதால, மாவட்டத்தின் முதன்மை அதிகாரி  முதற்கொண்டு, அனைத்து துறை அதிகாரிகளும் சுழன்றடித்து வருகிறார்களாம்.

ஒவ்வொரு தொகுதியிலும் தனியாக விழா நடத்தி, அந்தந்த தொகுதி இலைக்கட்சி எம்எல்ஏக்களை அழைத்து பேச வைப்பதிலும் அதிகாரிகள் கவனமா  இருக்காங்களாம். அவங்களும் விழாவுக்கு வந்து, முதல்வரை புகழ்ந்து தள்ளிட்டு, உள்ளாட்சி தேர்தல் வருது... எங்க பக்கம் இருங்க.. எல்லோருக்கும்  நல்லதையே செய்வோமுனு பிரசாரமே செய்து வாராங்களாம்... அதிகாரிகள் கூட இலைக்கட்சிக்காரங்களும் போவதால் விவிஐபியை புகழ்ந்து இது  முதல் கட்டம்தான் ஓட்டுபோடுங்க... இன்னும் நிறைய எதிர்பாருங்க என்று பேசிட்டு வர்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புதுச்சேரியில இந்த வாரம் என்ன வில்லங்கமான செய்தி...’’என்றார் பீட்டர் மாமா'
‘‘புதுச்சேரி அங்கன்வாடியில் பணியாளர், உதவியாளர் ஆட்கள் தேர்வுக்கு அறிவிப்பானை வெளியிட்டு, இதனை கவர்னர் அதிரடியாக ரத்து செய்ததால்,  சமூகநலத்துறை அமைச்சர் ஏகத்துக்கும் டென்ஷன் ஆகிவிட்டாராம். இதற்கு என்னகாரணம் என விசாரித்தபோது, சொந்த கட்சிக்காரரே அமைச்சருக்கு  எதிராக பெட்டிஷன் போட்டது தெரியவந்தது.  இதனால் கடுப்பான அமைச்சர், ஒரு மீட்டிங்கில் பெட்டிஷன் பார்டிகளால் ஒரே டென்ஷன். அரிசி, துணி,  வேலை என எதுவும் போடமுடியவில்லை. உடனே கவர்னருக்கு புகார் அனுப்பி கெடுத்து விடுகின்றனர். இவர்களையெல்லாம் பிடித்து உள்ளே  போடனும் என கர்ஜித்தார். ஆரம்பத்தில் கவர்னரை திட்டி வந்த அமைச்சர் இப்போ அதிகாரிகளை திட்டிக்கொண்டிருக்கிறாராம். இந்த விவகாரத்தில்  எல்லா கோப்புகளையும் ராஜ்நிவாசுக்கு எடுத்து வர வேண்டுமென செயலருக்கு கவர்னர் உத்தரவு போட்டிருக்கிறார். அங்கன்வாடி மேட்டரில் அமைச்சர்  தலை விரைவில் உருளும் என பேசிவருகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தீப மாவட்டத்துல என்ன நடக்குது...’’ என்றார் பீட்டர் மாமா'
‘‘திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஆக்டிங் பணிமனை மேலாளராக  மைக் நடிகர் பெயரை கொண்டவர் டெக்னிக்கல் பிரிவு ஊழியராக உள்ளார். இவர் பணிமனையை சேர்ந்த அரசு பஸ்களில் மைலேஜ் அளவினை  குறிப்பது, வெளியே செல்லாமல் நின்று போன பஸ்களின் எண்ணிக்கையை தெரிவிப்பதுதானாம். ஆனால் இவர் பணிமனையில் உள்ள மேலாளரை  கையில் போட்டுக்கொண்டு அவரது பணியினை இவரே செய்து வருவதாக கண்டக்டர், டிரைவர்கள் குமுறி வருகின்றனர்.

இவருக்கு உரிய முறையில் கவனிக்கும் சிலரை உள்ளூர் டவுன் பஸ்களிலும், கவனிக்காதவர்களை தொலைதூர பஸ்களிலும் பணியை ஒதுக்குவாராம்.  அதோடு பஸ்களுக்கு டீசல் போடுவதிலும் இவரது தகிடுதத்தம் அதிகமாம். இதனால் கடந்த மாதம் இப்பணிமனையை சேர்ந்த பஸ்கள் நடுவழியில்  நின்றன. டீசல் குறைந்ததை காரணம் காட்டி ஊழியர் ஒருவர் தலையில் கப்பம் கட்ட வைத்ததாகவும், சொந்த வேலையாக விடுப்பு கேட்டாலும்  பணிக்கு வரவில்லை எனக்கூறி ஆப்சென்ட் போட்டு மேலாளர் பணியினை தானே செய்து வருகிறாராம் மைக் நடிகர் பெயரை கொண்டவர். யாராவது  கேட்டால், ‘என்னை இந்த டெப்போவில் இருந்து வேறு எங்கேயும் மாற்ற முடியாது. உயர்அதிகாரிகள் என் பாக்கெட்டில்’ என்று கூறி அவர்கள் வாயை  அடைத்து விடுவாராம். இவரது அட்டகாசத்துக்கு எப்போது முடிவு கட்டுவார்கள் என்பது தெரியாமல் உள்ளுக்குள்ளேயே மனம் குமுறி வருகிறார்களாம்  டிரைவர், கண்டக்டர்கள் என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

 • monkey_thaayklannn1

  குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

 • eelephanttt11

  35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

 • muskes_ambani11

  27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

 • delhi_farmnmmmeee

  திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்