டிரான்ஸ்பரை கண்டித்து நூதன போராட்டம் 65 கி.மீ தூரம் ஓடிய போலீஸ் எஸ்.ஐ.
2019-11-17@ 01:10:23

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பித்தோலி காவல் நிலையத்தில் எஸ்ஐ.யாக பணியாற்றி வருபவர் விஜய் பிரதாப். இவருக்கு உயரதிகாரிகள் திடீரென இந்த ஸ்டேஷனில் இருந்து பணியிட மாற்றம் செய்துள்ளனர். ஆனால், இதற்கு விஜய் பிரதாப் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டிரான்ஸ்பரை கண்டித்து போராட்டம் நடத்த விஜய் பிரதாப் முடிவு செய்தார். மேலும், அதை நூதன வகையில் செய்து பொதுமக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப அவர் முடிவு செய்தார். இதற்காக, 65 கிலோ மீட்டர் தூரம் வரை விஜய் பிரதாப் ஓடினார். அதிகாரிகள் தன்னுடைய கோரிக்கையை ஏற்காமல் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாக விஜய் பிரதாப் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து 65 கி.மீ. தூரத்துக்கு ஓடியதால், விஜய் பிரதாப் திடீரென வழியில் மயக்கம் அடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் செய்திகள்
சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பழைய வாகனங்களுக்கு “பசுமை வரி” : மத்திய அரசு ஒப்புதல்
72-வது குடியரசு தினம்: தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்... முதன்முறையாக வங்கதேச படையினர் அணிவகுப்பில் பங்கேற்பு!!
8 மாதங்களில் முதன்முறையாக ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மிக மிக குறைவு ... கொரோனா இல்லாத நாடாக உருமாறும் இந்தியா!!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை நோக்கி தொடங்கியது விவசாயிகளின் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி
விருது பெற்ற சிறுவர்களுடன் கலந்துரையாடல் தலைவர்களின் சுயசரிதை படிக்க மோடி அறிவுரை
ரூ.100 நோட்டு செல்லாதா?: ரிசர்வ் வங்கி விளக்கம்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்