SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள்

2019-11-17@ 00:52:10

இந்தியாவில் கடந்த 2019 அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான
டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் ஆதிக்கம் தொடர்கிறது. அந்நிறுவனத்தின் 8 மாடல்கள் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்து.

இப்பட்டியலில், மாருதி சுஸுகி டிசையர் முதலிடத்தில் உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மற்றும் ஆல்டோ ஆகிய கார்களை வீழ்த்தி, டிசையர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் 19,569 டிசையர் கார்கள்  விற்பனையாகியுள்ளது.
இப்பட்டியலில், 2வது இடம் பிடித்திருக்கும் கார் மாருதி சுஸுகி ஸ்விப்ட். இந்த கார், கடந்த அக்டோபர் மாதம் 19,401 யூனிட் விற்பனையாகியுள்ளது.
இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.கடந்த மாதம் 17,903 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

இப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கும் கார் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரானா பலேனோ. கடந்த மாதம் 16,237 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பிரீமியம் ஹேட்ச்பேக்  செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பலேனோவின் ஆதிக்கம் தொடர்கிறது.
இப்பட்டியலில், ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் 14,683 எலைட் ஐ20 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஹூண்டாய்  மாடல் என்ற பெருமையை எலைட் ஐ20 பெற்றுள்ளது.

பிரபலமான டால்பாய், மாருதி சுஸுகி வேகன் ஆர் இப்பட்டியலில் 6வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 14,359 கார்கள் விற்பனையாகியுள்ளன.
கியா செல்டோஸ் நிறுவனம் இப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. கியா நிறுவனம் கடந்த மாதம் 12,850 செல்டோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக   ர் என்ற  பெருமையை கியா செல்டோஸ் தன்வசப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் இப்பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது, கடந்த மாதம் 10,634 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இதில், ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்  என்னவென்றால் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவையும் எஸ்-பிரெஸ்ஸோ ஓவர்டேக் செய்துள்ளது.
இந்த பட்டியலில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த கார், கடந்த மாதம் 10,227 யூனிட் விற்பனையாகியுள்ளது.
இப்பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை மாருதி சுஸுகி நிறுவனத்தின் படைப்பான மாருதி ஈகோ பிடித்துள்ளது. இந்த கார், கடந்த மாதம் 10,011 யூனிட் விற்பனையாகியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-01-2021

    26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • sun-dong25

    அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

  • hongkomgggg_1111

    ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்

  • china-gold25

    அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!

  • 25-01-2021

    25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்