பெங்களூரு ரேஸ்கோர்சில் பந்தய குதிரை தோற்றதால் பணத்தை கேட்டு ரகளை: போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு
2019-11-17@ 00:15:19

பெங்களூரு: பெங்களூரு ரேஸ்கோர்சில் குதிரை பந்தயம் நடந்தபோது ஒரு குதிரை கீழே விழுந்து தோற்று போனது. இதனால் அந்த குதிரை மீது பந்தயம் கட்டிய ரசிகர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் குதிரைப்பந்தய மைதானம் (ரேஸ்கோர்ஸ்) உள்ளது. அங்கு குளிர்கால சீசனுக்கான முதல்நாள் பந்தயம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஏராளமான குதிரைப்பந்தய ரசிகர்கள் தங்கள் அபிமான குதிரைகள் மீது பணம் கட்டினர்.
அப்போது, பந்தயத்தில் கலந்துகொண்டு ஓடிய குதிரைகளில் ஒன்று நிலை தடுமாறி குப்புற கீழே விழுந்தது. இதில் அக்குதிரையின் கால் முறிந்து தோற்றுப்போனது. மேலும் இந்த விபத்தில் மூன்று ஜாக்கிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, கீழே விழுந்த குதிரை மீது பணம் கட்டியவர்கள், தாங்கள் கட்டிய பணத்தை திருப்பித் தரும்படி டர்ப் கிளப் ஊழியரிடம் கேட்டனர். ஆனால், அவர் பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார். இதனால், கீழே விழுந்த குதிரை மீது பணம் கட்டிய நூற்றுக்கும் மேற்பட்டோர் ரகளையில் ஈடுபட்டனர். டர்ப் கிளப்பில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். பணம் கொடுக்க மறுத்தவரையும் தாக்கினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
கேரளாவில் 39.70% கொரோனா நோயாளிகள்: இந்தியாவில் முதலிடம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ம விருதுக்கு பரிந்துரைத்தது 98 பேருக்கு... கிடைச்சது ஒருவருக்கு..! சிவசேனா கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி
கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு 2 வழக்குகளில் ஜாமீன்
திருச்சூர் அருகே படுஜோராக விற்பனையாகும் மூங்கில் சர்பத்: நாமும் குடிக்க செல்வோமா?
கங்கனாவை பார்க்க நேரமிருக்கு... விவசாயிகளை சந்திக்க நேரமில்லையா?... மகாராஷ்டிரா ஆளுநர் மீது சரத்பவார் காட்டம்
அதிக தொண்டர்கள் உள்ளனர்: சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறையிடம் கோரிக்கை.!!!
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!