முத்தலாக் சட்டத்தை எதிர்த்து மனு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
2019-11-14@ 00:15:42

புதுடெல்லி: ‘முத்தலாக் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் சட்ட வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்,’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம் கணவர்கள் தங்கள் மனைவிக்கு மூன்று முறை ‘தலாக்’ கூறி உடனடியாக விவாகரத்து செய்கிறார்கள். மனைவியிடம் நேரிலோ, எழுத்துபூர்வமாகவோ, வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவோ இப்படி விவாகரத்து செய்வது நடைமுறையில் இருந்து வந்தது. இது சட்ட விரோதமாகவும், கிரிமினல் குற்றமாகவும் கருதப்படும் என்பதை வலியுறுத்தும் மசோதா கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, முத்தலாக் கூறும் கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த சட்டத்தை எதிர்த்து, இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியம், சீராத் உன் நபி அகடமி என்ற அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளும், தனி நபர்களும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நபி அகடமி சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், ‘`ஒரே பிரச்னை தொடர்பாக 20க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. ஒரே பிரச்னைக்காக 100 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், அவற்றை எல்லாம் எங்களால் விசாரிக்க முடியாது,’’ என்றனர். மேலும், இந்த மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
கேரளாவில் 39.70% கொரோனா நோயாளிகள்: இந்தியாவில் முதலிடம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ம விருதுக்கு பரிந்துரைத்தது 98 பேருக்கு... கிடைச்சது ஒருவருக்கு..! சிவசேனா கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி
கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு 2 வழக்குகளில் ஜாமீன்
திருச்சூர் அருகே படுஜோராக விற்பனையாகும் மூங்கில் சர்பத்: நாமும் குடிக்க செல்வோமா?
கங்கனாவை பார்க்க நேரமிருக்கு... விவசாயிகளை சந்திக்க நேரமில்லையா?... மகாராஷ்டிரா ஆளுநர் மீது சரத்பவார் காட்டம்
அதிக தொண்டர்கள் உள்ளனர்: சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறையிடம் கோரிக்கை.!!!
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!