சேலத்தில் முதல்வர் வீடு அருகே பெண்ணிடம் கவரிங் நகை பறித்த பைக் ஆசாமிகள்
2019-11-14@ 00:15:35

சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகர் பொன்னி தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவருடைய மனைவி செல்வகுமாரி (43). இவர் நேற்று பிற்பகல் வீட்டு அருகே நடந்து சென்றபோது பைக்கில் இருவர் ஹெல்மெட் மற்றும் டி-ஷர்ட் அணிந்தபடி வந்தனர். அவர்கள் செல்வகுமாரி அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு அருகிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதால் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க மாவட்டம் மற்றும் மாநகரம் முழுவதும் உள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் பைக்கில் ஹெல்மெட் மற்றும் டி-ஷர்ட் அணிந்தபடி வரும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே அந்த பெண்ணிடம் பறிக்கப்பட்டது கவரிங் நகை என போலீசார் தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
உல்லாச வாலிபர் கைது
பொதுமக்கள் கண்முன் கேபிள் டிவி ஆபரேட்டர் சரமாரி வெட்டிக் கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்; எம்எல்ஏ வீட்டு அருகே பரபரப்பு
போக்சோவில் டிரைவர் கைது
நகைக்கடை ஊழியர்களிடம் போலீஸ் சீருடையில் ரூ.80 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல்: தக்கலை அருகே பரபரப்பு சம்பவம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 6 ஆண்டு சிறை: மகிளா நீதமன்றம் உத்தரவு
பைக்கில் மணல் கடத்தல்; 2 பேர் கைது
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!