சுற்றுலா பயணிகளை கவர அறிமுகம் புதுவை போக்குவரத்து போலீசாருக்கு கருநீல, வெள்ளை நிற டி-சர்ட் சீருடை
2019-11-14@ 00:15:34

புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விடுமுறை நாட்களில் போக்குவரத்து போலீசார் கருநீல, வெள்ளை நிற டி-சர்ட் சீருடை அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் போக்குவரத்து போலீசாருக்கு புதிய சீருடைகளை அந்தந்த மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன. மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே புதிய சீருடை போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் போக்குவரத்து போலீசார் வெள்ளை நிற பேன்ட் மற்றும் சட்டையை சீருடையாக அணிந்து வந்தனர். இந்தநிலையில், வெள்ளை சட்டைக்கு பதிலாக கருநீலம், வெள்ளை நிறத்துடன் கூடிய டி-சர்ட் போக்குவரத்து போலீசாருக்கு சீருடையாக நேற்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த சீருடைகளை போக்குவரத்து போலீசாருக்கு முதல்வர் நாராயணசாமி, டிஜிபி கருத்தரங்கு அறையில் வழங்கி தொடங்கி வைத்தார். புதிய சீருடையை பணியில் இருக்கும் இன்ஸ்பெக்டர் முதல் காவலர்கள் வரை அனைவரும் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மட்டுமின்றி அரசு விடுமுறை நாட்களிலும் அணிய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தற்போது முதல்கட்டமாக ஒவ்வொரு காவலருக்கும் தலா 2 செட் புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், தலைமை செயலர் அஸ்வனி குமார், டிஜிபி பாலாஜி வஸ்தவா மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை தைத் தேரோட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் ஊர்வலமாக வந்த மணமக்கள்
அவன் இவன் பட வழக்கு: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்
அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா: திருப்பூர் மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர் நகரில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் மக்கள் தவிப்பு-வழிப்பறி சம்பவங்களால் அச்சம், பீதி
தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு!!
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!