SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்ரோயிட் சாதனங்களில் SMS ஊடாக Location ஐ பகிர்வது எப்படி?

2019-11-13@ 14:16:31

இன்று ஒருவர் தமது இருப்பிடத்தினையோ அல்லது வேறு ஒரு அமைவிடத்தினையோ மேப் ஊடாக பகிரக்கூடிய வசதி மொபைல் சாதனங்களில் தரப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப், வைபர் மற்றும் பேஸ்புக் உட்பட பல அப்பிளிக்கேஷன்கள் ஊடாக இவ்வாறு அமைவிடங்களை மற்றையவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். அவ்வாறே SMS ஊடாகவும் அன்ரோயிட் சாதனங்களில் அமைவிடங்களை பகிர்ந்துகொள்ளும் வசதி காணப்படுகின்றது. முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து உங்கள் அன்ரோயிட் சாதனத்தில் மெசேஜ் அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும் (ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் தேவையில்லை).

நிறுவின பின்னர் குறித்த அப்பிளிக்கேஷன் கேட்கும் அம்சங்களிற்கு அனுமதி கொடுக்கவும். அதன் பின்னர் Start Chat பொத்தானை கிளிக் செய்யவும். தொடர்ந்து அமைவிடம் பகிரப்படவேண்டிய மொபைல் இலக்கத்தினை தெரிவு செய்யவும். இப்போது + அடையாளத்தினை கிளிக் செய்து Maps என்பதை தெரிவு செய்யவும். அதற்கு அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Send this Location என்பதை கிளிக் செய்து பகிர்ந்துகொள்ளவும்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்