மழை வந்தால் தங்குமிடம் இலவசம்!
2019-11-13@ 12:57:34

நன்றி குங்குமம் முத்தாரம்
உலகின் அழகான தீவுகளில் ஒன்று எல்பா. இத்தாலியின் டஸ்கனி மாகாணத்தில் உள்ள இந்த தீவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது. காரணம், அடிக்கடி பெய்கின்ற சிறு மழை. தீவைச் சுற்றிப்பார்க்க வந்தவர்கள் மழையின் காரணமாக ஹோட்டலிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை. ஏமாற்றமடையும் அவர்கள் எல்பாவிற்கு மறுபடியும் வருவதில்லை. இதனால் ஹோட்டல் நடத்துபவர்களுக்கு நஷ்டம். இந்நிலையில் எல்பாவில் உள்ள ஹோட்டல்கள் ஒரு அறிவிப்பைத் தந்திருக்கின்றன.
‘‘தொடர்ந்து இரண்டு மணி நேரம் மழைபெய்தால் ஒரு நாள் இரவு தங்குவதற்காக நீங்கள் செலுத்திய கட்டணம் திரும்பத் தரப்படும். இரண்டு மணி நேரத்துக்கு மேல் மழை பெய்தால் தங்குவதற்கான கட்டணமே செலுத்த வேண்டியதில்லை. எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். காலை 10 மணி முதல் இரவு 8 மணிக்குள் பெய்யும் மழைக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும்...’’ என்பது அந்த அறிவிப்பு. எல்பாவில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் மழை பெய்து ஐந்து வருடங்களாகிவிட்டது.
மேலும் செய்திகள்
7 தலைமுறைகள்... 260 வருடங்கள்... சென்ட் தயாரிப்பில் நம்பர் ஒன்!
ஃபாரின் பொங்கல்!
துள்ளட்டும் காங்கேயம் காளைகள்
இவங்க வேற மாதிரி அம்மா!
யானைகளுக்கு கஷ்ட காலம்!
கொரோனாவுக்குப் பிறகும் சினிமா வாழுமா?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்