தேவாலய திறப்பு ஆராதனை விழா
2019-11-12@ 00:38:33

திருவொற்றியூர்: மாதவரம் தபால் பெட்டி தெருவில் செயின்ட் செபாஸ்டின் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இந்த நிலையில் மிகவும் பழமையான இந்த தேவாலயத்தில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்தயொட்டி “அர்ச்சிப்பு” என்ற தேவாலய திறப்பு ஆராதனை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆலய வாசலில் இருந்து குருக்கள் மற்றும் அருட்பணியாளர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆலயத்தினுள் செல்ல பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பிரார்த்தனை செய்து அர்ச்சித்து, திருப்பலி நிறைவேற்றினார்.
பின்னர் சிறப்பு பிரார்த்தனையும், ஆராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் பங்குத்தந்தை சைமன், இந்திய பிரான்சிஸ்கள் மறை மாநில தலைவர் பிரவீன் ஹென்றி டிசோசா, சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
“மார்கழி மழையால்” பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவித்திடுக : மு.க.ஸ்டாலின்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியதற்கு வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய் சேதுபதி!!
எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளில், வெற்றிநடை போடும் தமிழகத்தைக் காத்திட, நாம் அனைவரும் சபதம் ஏற்போம்; வெற்றி காண்போம் : ஈபிஎஸ் - ஓபிஎஸ்
கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்கள்தானே தவிர, ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் அல்ல : டிடிவி தினகரன்!!
மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்கிட வேண்டும்! : வைகோ வேண்டுகோள்
நீதிபதிகள் நியமனத்தை கொச்சைப்படுத்திய ஆடிட்டர் குருமூர்த்தி - திமுக சட்டத்துறை தலைவர் கடும் கண்டனம்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்