SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயிலாப்பூரில் இறந்தவரின் புகைப்படத்தில் போட்டிருந்த 9 சவரன் திருட்டு: உறவுக்கார பெண் கைது

2019-11-12@ 00:36:13

சென்னை: மயிலாப்பூர் விஎஸ்வி கோயில் தெருவை சேர்ந்தவர் பலராமன் (75). இவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் இறந்த மனைவியின் சடங்கு நிகழ்ச்சி கடந்த 22ம் ேததி நடந்தது. அப்போது புகைப்படத்தில் இறந்தவர் பயன்படுத்திய 9 சவரன் தாலி செயின் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. சடங்கு முடிந்து பார்த்தபோது 9 சவரன் செயின் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பலராமன் சடங்கிற்கு வந்த உறவினர்களிடம் கேட்டார். ஆனால் யாரும் “நாங்கள் எடுக்கவில்லை” என்று கூறினர். ஆனால் ஒரு பெண் மட்டும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த பலராமன், அவர் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார், பலராமனின் உறவினரான அடையார் இந்திராநகரை சேர்ந்த மீனா (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சடங்கு நேரத்தில் 9 சவரன் தாலி செயினை கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடியதை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து தாலி செயினும் பறிமுதல் செய்யப்பட்டது.

„ மேற்கு தாம்பரம், டிஎன்எச்பி காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன் (65). கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைத்து எல்இடி டிவி, லேப்டாப், ஐபோன், ஒன்றரை சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம். ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. „ திருச்சி லிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆதிகான் (49). இவர் கோபாலபுரத்தில் உள்ள நுகர் பொருள் வாணிப கழகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். சேப்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் தங்கி உள்ளார். கடந்த 8ம் தேதி பணி முடிந்து இரவு லாட்ஜிக்கு நடந்து சென்று கொண்டிருந்போது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள் ஆதிகான் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மாயமாகினர். இதுதொடர்பாக திருவல்லிக்கேணி முகமது ரவூப் (21), ஐஸ்அவுஸ் இம்ரான் பாஷா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

 • odisaa_satueesss

  ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!

 • 20-01-2021

  20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்