நீர்வரத்து 24,021 கனஅடியாக அதிகரிப்பு ஒரே ஆண்டில் 4வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
2019-11-12@ 00:11:07

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 24,021 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டில் 4வது முறையாக நேற்று இரவு அணை முழுகொள்ளளவை எட்டியது.கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 14,784 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 24,021 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 14 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் திறந்து விடப்படுகிறது. திறப்பை காட்டிலும், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 119.11 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 119.61 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் இந்த ஆண்டில் 4வது முறையாக அணை அதன் முழுகொள்ளளவை (120 அடி) நேற்று இரவு எட்டியது. நீர் இருப்பு 93 டிஎம்சி. அதேபோல், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் 2வது நாளாக நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. இதனால் அங்குள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து, பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை நீடிக்கிறது.
மேலும் செய்திகள்
ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் வாங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்
27 மணி நேரம்..195 நாடு!: பென்சில் முனையில் உலக நாடுகளின் பெயர், தலைநகரங்களை செதுக்கி கல்லூரி மாணவி சாதனை..!!
பவானியில் செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா: பக்தர்களே கருவறைக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு
தேர்தல் பறக்கும்படை அதிரடி!: கடலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்..!!
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார்
பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்