நாடாளுமன்ற நிதிநிலை குழுவுக்கு மன்மோகன் தேர்வு: மாநிலங்களவை அறிக்கை தகவல்
2019-11-12@ 00:10:00

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் நிதிநிலை குழுவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில், கடந்த 1991-96ம் ஆண்டுகளில் மத்திய நிதியமைச்சராக இருந்தார். இவர் கடந்த 2014 செப்டம்பர் முதல் 2019 மே வரை நாடாளுமன்ற நிலைக் குழுவில் இடம் பெற்றிருந்தார். இவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஆகஸ்ட் மாதம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், மாநிலங்களவை வெளியிட்ட அறிக்கையில், `மன்மோகன் சிங் நாடாளுமன்ற நிதிநிலை குழுவுக்கு மாநிலங்களவைத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, நிதிநிலை குழுவில் இடம் பெற்றிருந்த மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங் நகர மேம்பாட்டு குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.முன்னதாக, நிதிநிலை குழுவில் மன்மோன் சிங் இடம் பெற வேண்டி திக்விஜய் சிங் அக்குழுவில் இருந்து பதவியை ராஜினாமா செய்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
நகர உள்ளாட்சி ஊழியர்களுக்கும் ஜோதி சஞ்சீவினி திட்டம் விஸ்திரிக்க வேண்டும்: அமைச்சர் ஆலோசனை
ஒசகோட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ சரத் பச்சேகவுடா காங்கிரசில் ஐக்கியம்?
மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்கள் போலீஸ் கேன்டீனில் வழங்கப்படும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்
வீட்டு தோட்டம் அமைக்கும் பயிற்சி
கொரோனா விழிப்புணர்வுக்கு பதில் தடுப்பூசியை பிரபலப்படுத்த புது காலர் டியூன்
அரசை ஆதரித்தவர்களிடம் எப்படி பேச முடியும்? வேளாண் சட்ட நிபுணர் குழு உறுப்பினர்களை மாற்றுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் மனு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்