SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாளவாடி அருகே மின்வேலியில் சிக்கி யானை பலி

2019-11-11@ 20:33:51

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே மின்வேலியில் சிக்கி, யானை பரிதாபமாக பலியானது. ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேவசாமி, விவசாயி. வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். பயிர்களை, வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தவிர்க்க மாதேவசாமி நிலத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில் நேற்று வனத்தை விட்டு வெளியேறிய 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, மாதேவசாமியின் தோட்டத்தில் நுழைய முயன்றபோது மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், ஆய்வு செய்தனர். மின்வேலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ச்சப்பட்டிருந்ததால் யானை பலியானது தெரியவந்தது. இதற்கிடையில், தோட்டத்து உரிமையாளர் மாதேவசாமி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்