விண்வெளியில் பிஸ்கட்!
2019-11-11@ 17:24:09

நன்றி குங்குமம் முத்தாரம்
விண்வெளிக்கு வீரர்கள், வீராங்கனைகளை அனுப்புவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இப்போது முதல் முறையாக ஒரு அடுப்பை அனுப்பியிருக்கிறார்கள். அதுவும் பிஸ்கட் தயாரிப் பதற்காக. கடந்த வாரம் அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் இருந்து ஒரு விண்கலம் சர்வதேச விணகலத்துக்கு சீறிப் பறந்தது. அது ஒரு அடுப்பையும், பிஸ்கட் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களையும் ஏற்றிச்சென்றுள்ளது.
விண்வெளி வீரர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் இந்த அடுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக அதிக வெப்பம், புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் பிஸ்கட் தயாரிக்கும்போது அதன் வடிவம் எப்படியிருக்கும் என்பதை சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் ஆராயப்போகின்றனர்.முதல் முறையாக விண்வெளியில் பிஸ்கட் தயாரிக்கும் நிகழ்வு இதுதான்.
மேலும் செய்திகள்
துருக்கியின் செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்
மீண்டும் அமெரிக்காவில் தோன்றிய மர்ம தூண்
எரிவாயு ரகசியம்
'டியன்வென் - 1' விண்கலம்
உலகின் எடை மிக்க விலங்கு
புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது சீனா
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்