SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொள்ளாச்சி அருகே விவசாயிகளை அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு

2019-11-11@ 11:51:24

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை அரிசி ராஜாவை  மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள், வீடுகளுக்குள் புகுந்து அரிசியை மட்டும் தின்றுவிட்டு சென்றுவிடுவதால் காட்டு யானைக்கு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள் அரிசி ராஜா என பெயர் வைத்துள்ளனர். இந்த ஒற்றை காட்டு யானை வழக்கம் போல் வனப்பகுதியை விட்டு வெளியேறி பொள்ளாச்சியை அடுத்த அர்த்தனாரி பாளையம், பருத்தியூர், கரூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு ராதாகிருஷ்ணன் என்பவரது தோட்டத்திற்குள் சென்று தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று அதிகாலை திருமால் என்பவரை தாக்கி அவர் பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அர்த்தனாரி பாளையம் பகுதி மக்கள் வால்பாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காட்டு யானை அரிசி ராஜாவை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக வனத்துறை அதிகாரிகள் நேற்று டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், பாரி ஆகிய இரு கும்கி யானைகளுடன் அர்த்தனாரி பாளையம் பெருமாள் கோவில் பகுதியில் முகாமிட்டுள்ளனர். பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குநர் மாரிமுத்து, மாவட்ட வன அலுவலர்  வெங்கடேஷ், வனத்துறை மருத்துவர்கள் சுகுமார், மனோகரன், கலைவாணன் ஆகியோர் இதற்கான குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதை தொடர்ந்து காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வராகலியாரி பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்