SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சையது முஷ்டாக் அலி டி20 கேரளாவை வீழ்த்தியது தமிழகம்

2019-11-09@ 01:20:22

திருவனந்தபுரம்: சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 37 ரன் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தியது. கேரள மாநிலம் தும்பாவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராபின் உத்தப்பா தலைமையிலான  கேரள அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தமிழக அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய் ஒரு ரன்னிலும், ஜெகதீசன் 8 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பாபா அபராஜித், தினேஷ் கார்த்திக் இணை பொறுப்பாக விளையாடியது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அபராஜித் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். அப்போது அவர் 26 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 35 ரன் எடுத்திருந்தார்.  அடுத்த சிலநிமிடங்களில் 33 ரன் எடுத்திருந்த தினேஷ் கார்த்திக்கை ரன் அவுட் செய்தார் ராபின் உத்தப்பா. அடுத்து வந்த விஜய்சங்கர் 18 பந்துகளில் 25 ரன், ஷாருக்கான் 18 பந்துகளில் 28 ரன் எடுக்க அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. கடைசி நேரத்தில் முகமது அதிரடியாக விளையாட தமிழ்நாடு 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. முகமது 11 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 34 ரன், முருகன் அஸ்வின் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேரளா தரப்பில் பாசில் தம்பி 3, கே.எம்.ஆசிப் 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரளா களமிறங்கியது. அறிமுக வீரர் ஜி.பெரியசாமி தனது 2வது ஓவரில் ராபின் உத்தப்பாவை (9 ரன்) வெளியேற்றினார். ஓரளவு தாக்குப்பிடித்த விஷ்ணு வினோத் 24, ரோகன் 34,  சச்சின் பேபி 32  ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். கேரள அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு  137 ரன் மட்டுமே எடுத்தது. தமிழகம் 37 ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. நடராஜன், பெரியசாமி தலா 3, முருகன் அஸ்வின், எம்.முகமது ஒரு விக்கெட் வீழ்த்தினர். தும்பாவில் இன்று நடைபெறும் போட்டியில்  தமிழ்நாடு-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. அபராஜித்துக்கு இன்று ஒருநாள் மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மும்பை, சண்டிகர், திருவனந்தபுரம், சூரத், விசாகப்பட்டணம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 36 அணிகள் 5 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gurunanak30

  குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

 • bushfire30

  ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

 • thiruvannamalai30

  அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

 • vivasayigal30

  நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்