SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துளித் துளியாய்

2019-11-09@ 01:20:21

* கர்நாடகா பிரிமியர் லீக் டி20 தொடரின் பைனலில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெல்லாரி டஸ்கர்ஸ் அணி கேப்டன் சி.எம்.கவுதம், ஆல் ரவுண்டர் அப்ரார் காஸி கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய பெலகாவி பேந்தர்ஸ் அணி சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
* 2023ம் ஆண்டு உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரை (ஜன. 13-29) நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்த நிலையில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்தியா தேர்வு செய்யப்பட்டது.
* ஆசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு பைனலுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை சிங்கி யாதவ் 588 புள்ளிகள் பெற்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதி செய்தார்.
* சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் பாருபள்ளி காஷ்யப், சாய் பிரனீத் தோல்வியைத் தழுவினர்.
* ‘இளம் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட்டுக்கு போதுமான வாய்ப்புகளும் கால அவகாசமும் அளிக்கப்பட வேண்டும். நிச்சயம் அவர் தனது திறமையை நிரூபிப்பார்’ என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
* குடித்துவிட்டு அடிதடியில் ஈடுபட்ட இந்திய அணி கூடைப்பந்தாட்ட வீரர்கள் அம்ஜியோத் சிங், அர்ஷ்பிரீத் புல்லார், அம்ரித்பால் சிங் ஆகியோரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் 2018ல் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • formars29

  வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

 • coronadeath29

  கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

 • thee29

  பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

 • vadothara29

  குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்