SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீன ஓபன் பேட்மின்டன் சிராக் - சாய்ராஜ் ஜோடி அரை இறுதிக்கு தகுதி

2019-11-09@ 01:20:20

புஸோ: சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றது. கால் இறுதியில் முன்னாள் உலக சாம்பியன்களும், தற்போது உலக வெண்கலப் பதக்கங்களுக்கு சொந்தக்காரர்களுமான சீனாவின் லீ ஜுன் ஹுய் - லியு யூ ப்சென் இணையுடன் நேற்று மோதிய சிராக் - சாய்ராஜ் கோடி 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை போராடி வென்று 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது செட்டிலும் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் 21-19, 21-15 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினர். அரை இறுதியில் உலகின் நம்பர் 1 ஜோடியான இந்தோனேசியாவின் மார்கஸ் பெர்னால்டி ஜிடியோன் - கெவின் சஞ்ஜயா சுகமுல்ஜோ இணையுடன் சிராக் - சாய்ராஜ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். கடந்த மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன் பேட்மின்டன் தொடரின் பைனலில் இதே ஜோடியிடம் இந்திய வீரர்கள் தோற்று 2வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-12-2020

    01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gurunanak30

    குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

  • bushfire30

    ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

  • thiruvannamalai30

    அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

  • vivasayigal30

    நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்