SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிக்டாக் மூலம் கள்ளக் காதல் மனைவியை கொன்றார் கணவர் : ஆந்திராவில் பரபரப்பு

2019-11-09@ 00:31:18

திருமலை: ஆந்திராவில் டிக்டாக் வீடியோ பழக்கத்தில் கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட மனைவி அடித்து கொலை செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தாலுறு  கிராமத்தை சேர்ந்தவர் சேத்பாஷா (40), டெய்லர். இவரது மனைவி பாத்திமா (34). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பாத்திமா கடந்த சில மாதங்களாக டிக்டாக் வீடியோ பார்ப்பதிலும், விதவிதமான பாடல், சினிமா டயலாக்கிற்கு வீடியோ எடுத்து அதனை டிக்டாக்கில் பதிவு செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வந்தாராம். இதை சேத்பாஷா கண்டித்தும் அவர் இதை நிறுத்தவில்லையாம். தொடர்ந்து டிக்டாக் வீடியோவை பார்ப்பது, வீடியோ பதிவு செய்வது என தொடர்ந்து வந்தாராம். அப்போது டிக்டாக் வீடியோ மூலம் ஒரு நபருடன் பாத்திமாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த சேத்பாஷா பாத்திமாவை கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் பாத்திமா தனது கள்ளக்காதலனுடன் பழகி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரடைந்த சேத்பாஷா, அங்கிருந்த மரக்கட்டையால் மனைவி பாத்திமாவை சரமாரி தாக்கி, கழுத்தை கையால் நெரித்துள்ளார். இதில் பாத்திமா பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சேத்பாஷா தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார். பாத்திமாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கனிகிரி போலீசில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சேத்பாஷாவை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் டிக்டாக் வீடியோ எடுக்க வேண்டாம் என மனைவிக்கு பலமுறை தெரிவித்தும், அவர் கைவிடாததால் பத்திமாவை கொலை செய்தது தெரியவந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்