சிவகங்கை அருகே அரசு பஸ் திடீர் நிறுத்தம்: இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் மாணவ, மாணவிகள்
2019-11-08@ 20:12:22

சிவகங்கை: சிவகங்கை அருகே அரசுப் பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவ, மாணவிகள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை அருகே மல்லல் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 450க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மருதங்குடி, சத்தரசன்கோட்டை, குருந்தன்குளம், கடம்பன்குடி தம்புலிகன் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர மானாமதுரையில் இருந்து மல்லல் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன் மாலையில் இயங்கி வந்த பேருந்தை வேறு வழித்தடத்திற்கு அதிகாரிகள் திடீரென மாற்றி விட்டதாக தெரிகிறது. இதனால் பள்ளியில் பயிலும் 75க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இலவச பயண அட்டை இருந்தும் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி முடிந்ததும் ஊர்களுக்கு நடந்து செல்கின்றனர்.
சாலை வழியாக சென்றால் சுமார் 4 முதல் 5 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. அதற்கு பதிலாக அப்பகுதியில் உள்ள கண்மாயை கடந்து சென்றால் தூரம் குறையும் என்பதால் அவ்வழியை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் ஊர்களுக்கு செல்கின்றனர். கடந்த சில காலங்களாக நல்ல மழை பெய்து வருவதால் கண்மாய் முழுமையாக நிரம்பியுள்ளது. தற்போது மாணவர்கள் தங்களின் இடுப்பளவு தண்ணீர் உள்ள அந்த கண்மாயை கடந்து ஆபத்தான முறையில் வீடுகளுக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு எங்கள் பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும் வகையில் மானாமதுரையில் இருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது மாலையில் வந்த பேருந்து வராததால் இடுப்பளவு தண்ணீர் உள்ள கண்மாயில் ஆபத்தான முறையில் வீடுகளுக்கு வருகின்றனர். ஆகையால் மாணவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை கவனத்தில் கொண்டு மாலையில் நிறுத்திய பேருந்தை திரும்ப இயக்க வேண்டும்’’ என்றனர்.
Tags:
சிவகங்கைமேலும் செய்திகள்
சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகர்கோவிலில் மாநகராட்சி பணியாளர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி: அச்சத்தை போக்க விழிப்புணர்வு பிரசாரம்
நாகர்கோவில் மாநகர பகுதியில் குப்பைகள் தரம்பிரித்து வழங்கப்படுகிறதா?..மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் 7 மாவோயிஸ்டுகள் விடுதலை..!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 19ம்தேதி ரதசப்தமி உற்சவம் : ஒரே நாளில் 7 ரதங்களில் சுவாமி உலா
சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்