அயோத்தி விவகாரம்; சட்டம் - ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலர், டிஜிபி-யுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று ஆலோசனை
2019-11-08@ 10:43:15

புதுடெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் உத்திரபிரதேச தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்துகிறார். உத்தரபிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தின் உரிமை தொடர்பான வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 40 நாட்கள் நடந்த விசாரணையில் இருதரப்பு வாதங்களும் கடந்த மாதம் 16ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது. இந்த வழக்கின் தீர்ப்பு 17ம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அயோத்தி வழக்கு தீர்ப்பின் காரணமாக நாட்டில் அசாதாரண சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை எதிர்கொள்ளும் வகையில் போதுமான முன்னேற்பாடுகளை மாநிலங்கள் செய்து கொள்ளவேண்டும். அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும். பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தி நில உரிமை வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அம்மாநில தலைமை செயலர், டிஜிபி-யுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் செய்திகள்
மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய விளம்பர பதாகைகளை 72 மணி நேரத்திற்குள் அகற்ற உத்தரவு!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபல் வனப்பகுதியில் தொடரும் காட்டுத்தீ!: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பட்நாயக் உத்தரவு..!!
பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!: டாப்ஸி, காஷ்யப் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்..!!
தொடர்ந்து குறையும் குணமடைந்தோர் விகிதம்... தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 100க்கு கீழே சென்றது : இந்தியாவில் கொரோனா நிலவரம்!!
100வது நாளை எட்டியது டெல்லி விவசாயிகளின் போராட்டம் : தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவு!!
விலங்குகளையும், அவற்றிற்கான வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த வேண்டும்..! உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்